Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்!

View previous topic View next topic Go down

கடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்!

Post by தருண் on Wed Mar 09, 2016 2:30 pm

அண்மையில் சில குறுகிய கால கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அந்த ஃபண்டில் ரிடம்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், கிரெடிட் ரிஸ்க்தான். கிரெடிட் ரிஸ்க் என்றால்..?

சமீபத்தில் ஆம்டெக் ஆட்டோ என்ற நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருந்த பல குளறுபடிகளாலும், அளவுக்கு அதிகமான கடனாலும் நிறுவனம் தத்தளித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங் குறைக்கப் பட்டது. ஒரு சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பத்திரங்களை வாங்கி இருந்ததால், கடும் பாதிப்புக்குள்ளானது.

கடந்த காலத்தில் பெருவாரியான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கிரெடிட் ரேட்டிங்கை மட்டும் பார்க்காமல், அவர்களின் ஆராய்ச்சி வாயிலாக, சிக்கலான துறைகளில் உள்ள சிக்கலான நிறுவனங்களைத் தவிர்த்து வந்தன.

பொதுவாக, டெட் ஃபண்டு களில் மூன்று வகையான ரிஸ்க்குகள் காணப்படும்.


1. வட்டி விகித மாற்றம், 2.வெளியேறுதல் (லிக்விடிட்டி) 3. தரம் (கிரெடிட்).

இந்த ரிஸ்க்குகள் என்பது ஃபண்ட் போர்ட்ஃபோலியோ வுக்கானது. அவை மறைமுகமாக முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டெட் ஃபண்ட் முதலீட்டாளர்கள் உணர வேண்டும். அவற்றில், கிரெடிட் ரிஸ்க் என்பதுதான் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கிரெடிட் ரிஸ்க்கை ஆராயும் முன், டெட் ஃபண்டுகளின் அடிப்படையைப் பார்ப்போம். எப்படி வங்கி மற்றும் தனியார் நிறுவன வைப்பு நிதித் திட்டங் களைக் காட்டிலும் டெட் ஃபண்டுகளில் அதிக வருமானம் தரமுடியும் என்பதுதான்.

மியூச்சுவல் ஃபண்டுகள், அதிலும் குறிப்பாக டெட் ஃபண்டுகளின் தனித்துவமும், சிறப்பம்சமும் அவை நிர்வகிக்கப்படும் விதத்தில்தான் உள்ளது. ஒரு டெட் ஃபண்ட் திட்டத்தில் பல்வேறு முதலீட்டுப் பத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். அவை வெவ்வேறு காலகட்டங் களில் முதிர்வடைவதாக இருக்கும்.

மேலும், அவற்றை ஒரு திறமையான ஃபண்ட் நிர்வாகி, நிர்வகிக்கும்போது முதலீட்டாளர்களுக்கு வங்கி மற்றும் தனியார் நிறுவன வைப்பு நிதி மூலமான வருமானத்தைவிடக் கூடுதலாகக் கிடைக்கும்.

கிரெடிட் ரிஸ்க்!

சுருக்கமாகச் சொன்னால், கிரெடிட் ரிஸ்க் என்பது ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரம் மீதான முதலீட்டுத் தரத்தையும் நம்பகத் தன்மையையும் குறிக்கிறது.

உதாரணத்துக்கு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் வைப்பு நிதித் திட்டங்களிலேயே AAA, AA, A போன்று தரம் பிரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்களை நாம் பார்த்திருப்போம். அந்தத் தரம் பிரித்தலை கிரெடிட் ரேட்டிங் என்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகள் டெட் ஃபண்ட் முதலீட்டில் கிரெடிட் ரிஸ்க்கை கவனமாகவே கையாள்கிறார்கள்.

கிரெடிட் ரேட்டிங்!

பொதுவாக, கிரெடிட் ரிஸ்க் என்ற விஷயத்தைக் கையாள கிரெடிட் ரேட்டிங் என்ற தரச் சான்றிதழ் முறையை பின்பற்றுவார்கள். ஒரு கடன் பத்திரம் எவ்வளவு தரமானதாக உள்ளது என்பதற்கு கிரெடிட் ரேட்டிங் ஒரு அத்தாட்சி. கடன் வாங்க முற்படும் நிறுவனத்தின் வியாபாரப் போக்கு, நிதி நிலைமை, நிறுவனத்தின் ஸ்திரத் தன்மை, கடந்த கால வரலாறு, எதிர்காலப் போக்கு போன்றவற்றை ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு முதலீட்டு தரச் சான்றிதழ் வழங்கப்படும். இதை வழங்க இந்தியாவில் க்ரிஸில், கேர், இக்ரா, ஃபிட்ச் போன்ற முதலீட்டுத் தரச் சான்றிதழ் நிறுவனங்கள் உள்ளன.



என்ன பயன்?

கிரெடிட் ரேட்டிங்கால் என்ன பயன்? கடன் பத்திர முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் தரச் சான்றிதழ் என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். அவர்களின் முதலீட்டு நம்பிக்கையை பலப்படுத்தும்.

AAA - அதிகபட்ச நம்பிக்கை, AA-அதிக நம்பிக்கை, A- போதுமான அளவு நம்பிக்கை, BBB - சுமாரான நம்பிக்கை, BB - மிகக் குறைவான நம்பிக்கை, B - அதிக ரிஸ்க், C - அளவுக்கு அதிகமான ரிஸ்க், D - டிஃபால்ட் அல்லது முற்றிலும் நம்பகத் தன்மையற்றது.

டெட் ஃபண்ட் நிர்வாகிகள் தங்களது போர்ட்ஃபோலியோ வில் அதிகமாக வைத்திருப்பது AAA தரச் சான்றிதழ் பெற்ற முதலீட்டுப் பத்திரங்கள். அதற்கு அடுத்தபடியாக AA அல்லது A தரச் சான்றிதழ் பெற்றுள்ள பத்திரங்களையும் சிறிது வைத்திருப்பார்கள்.

என்ன வித்தியாசம்?

இந்தத் தரப் பாகுபாட்டில் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. முதலீட்டுப் பத்திரங்களின் தரம் உயரும்போது கிடைக்கக் கூடிய வருமானம் குறையும். அதேபோல், பத்திரங்களின் தரம் குறையும்போது வருமானம் அதிகரிக்கும்.

பொதுவாக, முதலீட்டாளர்கள் தனியார் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, அதிக ரேட்டிங் உள்ள நிறுவனங்களின் வட்டி விகிதம் சற்று குறைவாக இருக்கும். குறைவான ரேட்டிங் அல்லது ரேட்டிங் இல்லாத நிறுவனங்களில் அதிக வட்டி விகிதம் கிடைக்கும்.

பல முதலீட்டாளர்கள் பெரும்பாலான முதலீடுகளை நல்ல ரேட்டிங் உள்ள நிறுவனங்களிலும், ஒரு சிறிய பகுதியை அதிக வருமானத்துக் காக குறைவான ரேட்டிங் கொண்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்வார்கள். இதையேதான் சற்று வித்தியாசமாக டெட் ஃபண்டில் நிர்வாகிகள் கடைப்பிடிக்கிறார்கள்.

தரமான, சீரான, வருமானத்துக்கு அதிகபட்ச ரேட்டிங் உள்ள நிறுவனங்களிலும், சற்று கூடுதல் வருமானத்துக்கு குறைவான, அதாவது AA அல்லது A ரேட்டிங் கொண்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்வார்கள். இந்த வழிமுறை எப்போதும் வெற்றியைக் கொடுக்கும் என்று கருத முடியாது.

செய்ய வேண்டியது என்ன?

வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களின் வைப்புத் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் டெட் ஃபண்ட் திட்டங்கள் கூடுதல் லாபத்தையும் வருமானத்தையும் கொடுக்கும் என்றாலும், சரியான தரமான டெட் ஃபண்டுகளை தேர்வுசெய்து முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை ஓரளவுக்காவது ஆராய்ந்து தரமான கிரெடிட் ரேட்டிங் உள்ள முதலீடுகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். தரமற்ற நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum