Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஃபண்ட் முதலீடு: புதிதாக வரும் ரிஸ்க்கோ மீட்டர்!

View previous topic View next topic Go down

ஃபண்ட் முதலீடு: புதிதாக வரும் ரிஸ்க்கோ மீட்டர்!

Post by தருண் on Sun May 17, 2015 12:02 pm

ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை ஸ்பீடோமீட்டர் காட்டுகிறது. நம் வாகனம் சீரான வேகத்தில் பயணித்தால்தான் நமக்கும், நம் வாகனத்துக்கும் பாதுகாப்பு. அது போலத்தான் நம் முதலீடுகளும். நம் முதலீடு எப்படிப்பட்ட ரிஸ்க் உள்ளவை என்பதை அறிந்துகொண்டு முதலீடு செய்வதே சிறப்பு.

எந்த ஃபண்டுகளில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்து முதலீடு செய்வதற்கு வசதியாக 2013-ம் ஆண்டு செபி அமைப்பின் உத்தரவின் பெயரில் கலர் கோட் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இது ஃபண்ட் திட்டங்களின் ரிஸ்க் அளவை பளிச்சென காட்டாததால் தற்போது மாற்றப் படுகிறது.



தற்போது வழக்கத்தில் இருக்கும் கலர் கோட், ஜூலை 1-ம் தேதி முதல் ரிஸ்க்கோமீட்டராக (Riskometer) மாறவிருக்கிறது. கலர் கோட் மற்றும் ரிஸ்க்கோமீட்டர் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன, இதனால் முதலீட்டாளர் களுக்கு என்ன நன்மைகள் என்பதை விளக்குகிறார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் என்.சத்தியமூர்த்தி.

‘‘தற்போதுள்ள கலர் கோட், ஃபண்டுகளின் ரிஸ்க்-ஐ மூன்று விதமாகப் பிரிக்கிறது. நீலம் - குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகளான லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள், ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள், டைனமிக் பாண்டு ஃபண்டுகள், லாங் டேர்ம் இன்கம் ஃபண்டுகள் மற்றும் கில்ட் ஃபண்டுகளைக் குறிப்பது.

மஞ்சள் - மிதமான ரிஸ்க் உள்ள மன்த்லி இன்கம் பிளான் மற்றும் கடன் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளைக் குறிப்பது.



ப்ரவுன் - அதிக ரிஸ்க் உள்ள ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகள், பங்குச் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளைக் குறிப்பது.

தற்போது இந்த கலர்  கோட்-ஐ காட்டிலும் தெளிவாக ஒரு ஃபண்டையும் அதன் ரிஸ்க்கின் அளவையும் வெளிப்படுத்துவது போல ரிஸ்க்கோமீட்டர் உருவாக்கப் பட்டிருக்கிறது. இது வரும் ஜூலை 1, 2015-லிருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் ஃபண்டுகளைப் பற்றி விவரிக்கும் டாக்குமென்ட்டு களின் முதல் பக்கத்தில் இந்த ரிஸ்க்கோ மீட்டர் இருக்க வேண்டும் என்று செபி அறிவித்திருக்கிறது.

இந்த மீட்டரில் ஐந்து பிரிவுகள் இருக்கின்றன. நீல நிறத்தில் இருந்த ஃபண்டுகளை அதன் ரிஸ்க் அளவுக்குத் தகுந்தாற் போல, லோ மற்றும் மாடரேட்லி லோ என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மஞ்சள் நிறத்திலிருந்து ஃபண்டுகளை மாடரேட் என்கிற பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ப்ரவுன் நிற கோடில் இருந்த ஃபண்டுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதன் ரிஸ்க் அளவை பொறுத்து ஹை மற்றும் மாடரேட்லி ஹை என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

ரிஸ்க்கோமீட்டரின் விவரம்:

லோ (Low) - லிக்விட் ஃபண்டு கள், அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் மற்றும் ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் மிகக் குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டு களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன.

மாடரேட்லி லோ (Moderate Low) - டைனமிக் பாண்டு ஃபண்டுகள், லாங் டேர்ம் இன்கம் ஃபண்டுகள், கில்ட் ஃபண்டுகள் மாடரேட்லி லோ என்கிற புதிய பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மாடரேட் (Moderate) - மன்திலி இன்கம் ஃபண்டுகள், கடன் சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள் போன்ற மஞ்சள் நிறத்தில் இருந்த ஃபண்டுகளை அப்படியே இதில் சேர்த்திருக்கின்றனர்.

மாடரேட்லி ஹை (Moderately High) - பேலன்ஸ்டு ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஹை (High) - அனைத்து ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகள் மற்றும் திட்டங்கள் இந்தப் பிரிவில் உள்ளன.



ரிஸ்கோமீட்டரில் உள்ள நன்மைகளை இனி பார்ப்போம்.

1. கலர் கோட்-ல் ஓரளவுக்கு ரிஸ்க் உள்ள கில்ட் ஃபண்டுகள், லாங் டேர்ம் கில்ட் ஃபண்டுகள் கூட மிகக் குறைவான ரிஸ்க் உள்ள ஃபண்டுகளாக நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கிறது. சந்தையில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் மாற்றப்படுவதால், முதலீடு செய்த அசல் தொகையே குறைய வாய்ப்பிருக்கிறது. தற்போது அதன் ரிஸ்க்கின் அளவைப் பொறுத்து மாடரேட்லி லோ எனப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

2. அதேபோல, 100% ஈக்விட்டி ஃபண்டுகளை (Pure Equity Funds) காட்டிலும், பேலன்ஸ்டு ஃபண்டு களின் ரிஸ்க் குறைவானவையே. ஆனால், ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் அனைத்தும் அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளாக ப்ரவுன் நிறத்தில் சேர்க்கப்பட் இருந்தன. தற்போது முதலீட் டாளர்கள் சரியாகப் புரிந்து கொண்டு பேலன்ஸ்டு ஃபண்டு களில் முதலீடு செய்ய இந்த ரிஸ்க்கோமீட்டர் வழி வகுத்திருக்கிறது’’ என்றார்.

இனி ரிஸ்க் பற்றி அறிந்து முதலீட்டாளர்கள் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!
--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum