Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


2014-15 நிதியாண்டில் சென்செக்ஸ் 25% உயர்வு

View previous topic View next topic Go down

2014-15 நிதியாண்டில் சென்செக்ஸ் 25% உயர்வு

Post by தருண் on Wed Apr 01, 2015 6:19 pm



2014-15 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான நேற்று பங்குச் சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. இந்த நிதி ஆண்டில் சென்செக்ஸ் 25 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

நேற்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமான சூழ்நிலையைக் கண்டது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் குறியீடு 18 புள்ளிகள் சரிந்து 27957 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 1 புள்ளிகள் சரிவைக் கண்டு 8491 புள்ளிகள் முடிவடைந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 28180 புள்ளிகள் வரை வர்த்தகமானது. மதியத்துக்குப் பின் சரியத் தொடங்கிய சந்தை வர்த்தக முடிவு நேரத்தில் 18 புள்ளிகள் இறக்கம் கண்டது.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் 1587 பங்குகள் ஏற்றத்தையும், 1135 பங்குகள் இறக்கத்தையும் கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு, ஹெல்த் கேர் நிறுவனப் பங்குகள் 1 சதவீதம் வரை அதிகரித்தன. கேபிடல் குட்ஸ், எப்எம்சிஜி, ஐடி துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சரிந்தன. அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையின் இந்த போக்குகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தனர் என்று சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ பங்குகள் சரிவைக் கண்டன. ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் தங்களது குறிப்பிட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. எஸ்பியை நிறுவனம் தங்கள் வசம் உள்ள எஸ்பிஐ இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு எஸ்பிஐ இயக்குநர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் பிபிசில், டாடா பவர் கெயில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன. ஓஎன்ஜிசி, பஞ்சாப் நேஷனல் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல் , ஹிண்டால்கோ பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன.

25 சதவீத ஏற்றம்

நேற்றுடன் முடிந்த நிதியாண்டில் சென்செக்ஸ் 25 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளது. நிப்டி 26 சதவீதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. 25 பார்மா நிறுவனங்களின் பங்குகள் 100 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளன. 2014 ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 22386 புள்ளிகளில் முடிவடைந்தது. இது 2015 ஆம் ஆண்டு 25 சதவீதம் வளர்ந்து 27957 ஆக உள்ளது. இது புதிய சாதனை என சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சந்தை 29500 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இது தொடர்பாக கருத்து கூறிய சந்தை வல்லுனர்கள் இந்த நிதியாண்டின் மத்தியில் அல்லது டிசம்பர் மாதத்துக்குள் சென்செக்ஸ் 32000 புள்ளிகள் வரை உயரும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளனர். 2015-ம் ஆண்டில் சுமார் 30 சதவீதம் வரை முதலீடுகள் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

இதற்கிடையில் 2009 -10 நிதியாண்டுக்கு பிறகு சிறந்த நிதியாண்டு என செக்செக்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மோசமான மாதம் இது எனவும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 2013 பிப்ரவரிக்கு பிறகு சென்செக்ஸ் 4.8 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுபோல ஆகஸ்ட் 2013 க்கு பிறகு நிப்டி 4.60 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த இறக்கமான நிலையிலும் சந்தை 24.9 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum