Latest topics
» ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்!
by தருண் Fri Jan 13, 2017 11:13 am

» உங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:49 am

» பிரீமியம் ஃபர்ஸ்ட்... மற்றவை நெக்ஸ்ட்!
by தருண் Fri Jan 13, 2017 10:28 am

» கணக்கில் காட்டாத பணம்... வரி எவ்வளவு? அபராதம் எவ்வளவு?
by தருண் Fri Jan 13, 2017 10:20 am

» பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... பளிச் 5 வழிகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:10 am

» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?
by தருண் Fri Jan 13, 2017 10:05 am

» ஃப்ளாட் வாங்கப் போறீங்களா..? 5 முக்கிய செக் லிஸ்ட்
by தருண் Mon Jan 09, 2017 2:10 pm

» கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா!
by தருண் Mon Jan 09, 2017 2:07 pm

» சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ்
by தருண் Mon Jan 09, 2017 2:03 pm

» வருமானத்தில் வரலாறு படைத்த ஃபண்டுகள்!
by தருண் Mon Jan 09, 2017 1:58 pm


டாக்ஸ் ஃபைலிங் செய்துவிட்டீர்களா?

View previous topic View next topic Go down

டாக்ஸ் ஃபைலிங் செய்துவிட்டீர்களா?

Post by தருண் on Tue Mar 31, 2015 11:50 am

சரியான தேதியில் வருமான வரி கட்டுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்கிறீர்கள். சரியான தேதியில் வரி கணக்கு தாக்கல் செய்வது மூலம் உங்களின் கடன் பெறும் தகுதியை அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்பதை நம்மில் பலரும் புரிந்துகொள்வதில்லை. நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்த வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி முதலீடு செய்துவிடுகிறோம். ஆனால், சரியான நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.

இதனால் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. உதாரணத்துக்கு,  வீட்டுக் கடன் கேட்டுப் போனால், கடந்த மூன்றாண்டுக்கான ஐ.டி ரிட்டர்ன் விவரத்தைக் கேட்பார்கள். வரிக் கணக்கு தாக்கல் எதுவும் செய்யவில்லை என்றால், கடன் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். வீடு வாங்குவது தள்ளிப்போகும்.



இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தவிர்க்க, சரியான நேரத்தில் வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடுவதுதான் புத்திசாலித்தனம். மேலும், நடப்பு 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கடந்த 2013-14ம் ஆண்டுக்கான வரி பாக்கி எதுவும் இல்லை என்றால், 2015 மார்ச் 31 வரைக்கும் அபராதம் எதுவும் இல்லாமல் வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

இந்தக் கெடு தேதியை தாண்டும்போது, வருமான வரி அதிகாரியைப் பொறுத்து ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 2013-14ம் ஆண்டுக்கான வரி பாக்கி இருக்கிறது என்றால் அபராதம் கட்டவேண்டி வரும். 2014 ஏப்ரல் முதல், மாதம் ஒன்றுக்கு பாக்கி தொகைக்கு 1% தனி வட்டிப் போட்டு, வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஜூலை 31 கெடு தேதி தாண்டினால் ஏற்படும் இழப்புகள்!


1.பொதுவாக முடிந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சம்பளக்காரர்களுக்கு ஜூலை 31 கெடு தேதியாக இருக்கிறது. இதனைத் தவறவிட்டவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் வரிக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

2.அதேநேரத்தில், ஜூலை 31 கெடுதேதியைத் தவறவிடும் பட்சத்தில் வரிக் கணக்குப் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில் முதலீடு அல்லது செலவுக்கான வரிச் சலுகையை க்ளெய்ம் செய்யத் தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.

3. ஜூலை 31 கெடு தேதிக்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில், மூலதன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டு, இரண்டாவது கெடு தேதியான அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

4.வரிக் கணக்கை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும்பட்சத்தில் ரீஃபண்ட் கிடைக்கத் தாமதமாகும். ஒருவருக்கு ரீஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது ரிட்டர்ன் தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான், ரீஃபண்ட் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். அந்த வகையில் தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்தால், ரீஃபண்ட் வரவேண்டி இருந்தால் குறைவான வட்டிதான் கிடைக்கும்.

5.சில நேரங்களில் வரிச் சலுகைக்கான ஆவணங்களை அலுவலகத்தில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய்விடும். அப்போது உங்களின் வரிச் சலுகைக்கான முதலீடு அல்லது செலவு விவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம் பெறாமல் போய்விடும். படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப் பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. நீங்கள் ஏதாவது வரிச் சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.

இந்நிலையில் நீங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, வீட்டு வாடகை ரசீது, மருத்துவச் செலவு, பயணச் செலவுகள், வரிக் கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீஃபண்ட் வாங்க முடியும்.

6.ஜூலை 31-க்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்தபோது, சில வரிச் சலுகைகளுக்கான ஆதாரம் தர முடியவில்லை என்றால் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தில் அதனைக் குறிப்பிட்டு ரீஃபண்ட் கேட்கலாம்.

ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரிக் கணக்கு தாக்கல் செய்த நிதியாண்டு இறுதியிலிருந்து இரண்டு ஆண்டு களுக்குள் எத்தனை முறை வேண்டு மானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய்ய முடியும்.

இதற்குமுன் நீங்கள் ரிட்டர்னை ஆன்லைனில் செய்திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவைஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும்.

எனவே, 2013-14-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்வீர்கள்தானே?

உஷார் எல்டிஏ க்ளெய்ம்!

விடுமுறை சுற்றுலா படியை (LTA) நிறுவனத்தின் மூலம் மட்டுமே கோரிப் பெற முடியும். எல்டிஏ வரிச் சலுக்கைக்கான விவரம் ஃபார்ம் 16-ல் இல்லாமல்  வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதாரத்தை இணைத்துக் கொடுத்தால், ரீஃபண்ட் கிடைக்காது. இந்தச் சலுகைக்கான ஆதாரத்தை நிறுவனத்திடம் கொடுத்து அடுத்த நிதியாண்டில் வரிச் சலுகை பெறலாம். அல்லது அடுத்த ஆண்டுச் செல்லும் (புதிய) சுற்றுலாவுக்கு வரிச் சலுகை பெறலாம். நான்கு ஆண்டு பிளாக்கில் இருமுறை எல்டிஏ வரிச் சலுகை பெற முடியும்.

22 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றின் மூலம் அதிகத் தொகையைச் செலவிட்டிருந்தால், இந்த விவரங்கள் ஆண்டுத் தகவல் அறிக்கையாக (Annual Information Return - AIR) சம்பந்தப்பட்ட அமைப்பின் மூலம் வருமான வரித் துறைக்கு வந்துவிடும். அந்த வகையில் அதிக வருமானம் வந்தவர்கள், அதிகத் தொகையை முதலீடு செய்தவர்கள், அதிகத் தொகையைச் செலவிட்டவர்கள் விவரம் ஐ.டி துறைக்கு எளிதில் கிடைத்துவிடும். பான் எண்ணின் அடிப்படையில் இவர்கள் தங்களின் வருமானத்தை அரசுக்குத் தெரிவித்தார்களா என்பது சுலபமாகக் கண்டுபிடிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டில் இதுபோன்ற வரிக் கணக்கு தாக்கல் செய்யாத ஏறக்குறைய 22 லட்சம் பேருக்கு ஐ.டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

--ந.விகடன்

தருண்

Posts : 1255
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum