Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


தொழிலில் பின்தங்கும் இந்தியா... என்ன செய்தால் முன்னேறும்?

View previous topic View next topic Go down

தொழிலில் பின்தங்கும் இந்தியா... என்ன செய்தால் முன்னேறும்?

Post by தருண் on Wed Nov 12, 2014 11:07 am

உலக நாடுகளில் எளிதாகத் தொழில் தொடங்கக்கூடிய நாடுகளின் பட்டியலை உலக வங்கி சென்ற வாரம் வெளியிட்டது. அதில் இந்தியாவுக்கு 142-வது இடம் கிடைத்திருக்கிறது. இந்தியாவைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகள்கூட இந்தியாவைவிட முன்னிலையில் இருப்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.

இந்தியாவில் தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் இந்தச் சமயத்தில், இந்தப் பட்டியல் வெளியாகி இருப்பது அனைவருக்கும் தொழிற்துறை வளர்ச்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் இந்தியா மட்டும் இந்தப் பட்டியலில் தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது. இதற்கு என்ன காரணம்,  நம் நாட்டில் தொழில் தொடங்குவதில் என்ன சிக்கல், என்ன செய்தால் இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்க முடியும், தற்போது அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் இந்தத் தரவரிசையை மாற்றுமா என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலை இனி பார்ப்போம்...மற்ற நாடுகளின் நிலை என்ன?

இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர், நியூசிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 7-வது இடத் திலும், இங்கிலாந்து 8-வது இடத்திலும் உள்ளது. நம்மைவிட சிறிய நாடுகளான இலங்கை (99), நேபாளம் (108), பூடான் (125), பாகிஸ்தான் (128) ஆகிய இடங்களில் உள்ளன. இந்தியாவைவிட பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பின்தங்கியுள்ள நாடுகள், இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. இதற்கு, அந்த நாடுகளில் உள்ள எளிமையான அனுமதி செயல்முறை கள்தான் என்கிறது ஆய்வு. தவிர, பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா மட்டுமே சறுக்கலில் உள்ள நாடாக உள்ளது.

ஏன் பின்தங்குகிறது இந்தியா?

இந்தியாவில் சாதாரணமாக ஒருவர் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு பல தடைகள்  உள்ளன. அதில் முக்கியமாக, இந்தியாவில் தொழில் துவங்க 12 வழிமுறைகளும்; அதற்காக 27 நாட்களையும் செலவழிக்க வேண்டி இருக்கிறது. கட்டுமான அனுமதி பெற 35 வழிமுறைகளையும், 168 நாட் களையும் செலவழிக்க வேண்டும்.
இப்படி, ஒரு தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வழிமுறை களையும் பின்பற்றி பணியைச் சிறப்பாக ஆரம்பிக்க, இந்தியாவில் 1,420 நாட்கள் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அதாவது, வருடக் கணக்கில் பார்க்கப் போனால் 3 வருடம் மற்றும் 325 நாட்களாக உள்ளது. இதனுடன், அரசியல் குறுக்கீடுகள், லஞ்சம் போன்ற காரணங்களும் தொழில் தொடங்குவதற்கான வேலையை மேலும் காலதாமதம் ஆக்குகின்றன.

சிக்கல்கள் பலவிதம்!

இந்தியாவில் தொழில் தொடங்க பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

1. நிலம் கையகப்படுத்துதல்!

இன்றைக்கு தொழில் தொடங்க பெரிய சவாலாக இருப்பதே, தொழிற்சாலைத் தொடங்க தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதுதான். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அலைந்து தேடிய ஓர் இடத்தில், நில ஆக்கிரமிப்புகள் உள்ளதா, மண்வளம் எப்படி என்கிற சோதனை செய்து அந்த முடிவுகள் வந்து, அரசிடம் அனுமதி வாங்குவதற்குள் பல மாதங்கள்  கடந்து விடுகிறது.

2. பதிவு செய்தல்!

இந்தியாவில் ஒரு தொழிலை பதிவு செய்வதற்கு மொத்தம் 33 அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி, கட்டுமானத் துறை அனுமதி, நில அனுமதி, மின்சார வாரிய அனுமதி, தொழிற்துறை பாதுகாப்பு அனுமதி என 33 அனுமதிகளைப் பெற குறைந்தபட்சம் 400 நாட்கள் தேவைப்படு கின்றன. இந்த அனுமதிகளை எல்லாம் வாங்கி தொழிலை ஆரம்பிப்பதற்குள் ஆண்டுகள் உருண்டோடிவிடுகின்றன.3. தாமதத்தால் ஏற்படும் செலவுகள்!

இந்தக் காலதாமதத்தால் ஏற்படும் செலவுகள் அதிகமாகிறது. உதாரணமாக, ஒருவர் தொழில் துவங்க வாடகைக்கு இடத்தை எடுத்துவிட்டு, அனுமதிக்காகக் காத்திருந்தால் அதற்கான வாடகை,  சட்டச் சிக்கல்களைக் களைய வக்கீல்களுக்கான கட்டணம் என செலவும் அதிகரிக்கிறது. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் அரசியல் குறுக்கீடு, லஞ்சம் போன்ற பிரச்னைகள் வந்து, மேலும் சிக்கல் உண்டாகிவிடும்.

4. வரிச் சிக்கல்கள்!

வரித் துறை அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் தொழில் தொடங்குவது காலதாமதத்துக்கு உள்ளாகிறது. சில வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுவதும், பல நிறுவனங் களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். ஜிஎஸ்டி என்று சொல்லப்படுகிற பொருள் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மட்டுமே வரி தொடர்பான பிரச்னைகள் குறையும்.
பின்னோக்கி வரி விதித்தல் என்கிற விஷயமும் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு நிறுவனங்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதனால் சில நிறுவனங்கள் நம் நாட்டைவிட்டே ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொழில் துறையினரும் காரணமா?

தொழில் தொடங்குவதற்கான அனுமதியை குறுகிய காலத்தில் பெற அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தருகின்றனர் சிலர். சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற சரியான வசதி ஏற்படுத்தாமல்கூட அனுமதி வாங்கிவிடுகின்றனர். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்ற எண்ணம் தொழில் துறையினர் மத்தியில் இருப்பதால், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மேலும் சிக்கலாகின்றன.

என்னதான் தீர்வு?

தற்போது மோடி அரசினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஓரளவுக்கு உதவும். இந்தத் திட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்த 25 துறைகளும் தொழில் துவங்குவதில் எந்த நிலையில் இருக்கின்றன, இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன  என்பதைப் பார்த்து அரசு நடவடிக்கை எடுத்தால், இன்னும் நிறைய நிறுவனங்கள் தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது.

தற்போது அனுமதி வழங்குவதில் ஒற்றை சாளர முறையை அறிமுகப் படுத்துவது தொடர்பாக விவாதித்துவரும் மத்திய அரசு, பணியாளர் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்புள்ளது என சொல்லியிருப்பது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதி களுக்கான செயல்முறைகளும் எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

மற்ற நாடுகளைவிட பொருளாதார ரீதியாக வளரும் நாடாக முன்னிலைப் படுத்திக் கொள்ளும் நாம், இந்தச் செயல்முறைகளை எளிமைப்படுத்தி ஒற்றை சாளர முறைகளைக் கொண்டுவந்தால்தான் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும்.  

‘‘தற்போது வந்திருக்கும் இந்தப் பட்டியல், கடந்த மே 2014 வரையிலான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்.  அடுத்த ஆண்டு இந்தியாவை டாப்  50-க்குள் கொண்டு வருவதே எங்கள் இலக்கு’’ என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
டாப் 50 இடத்தில் இடம் பெறாவிட்டா லும், குறைந்தபட்சம் டாப் 100-க்குள் நுழையத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தாலே போதுமே!‘‘20 மாதங்கள் காத்திருக்க வேண்டும்!’’

வி.லட்சுமிநாராயணசாமி,  தலைவர், சீமா (SIEMA)

‘‘இந்தியா தொழில் தொடங்குவதில் பின்தங்க அரசு அனுமதி பெறுவதில் உள்ள வழிமுறைகளும், அதனால் ஆகும் காலதாமதமுமே முக்கிய காரணங்கள் ஆகும். குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் காலதாமதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்சார வசதியைப் பெறவே ஏழு அனுமதிகளைப் பெறவேண்டிய சூழல் இன்றைக்கும் இருக்கிறது. இதுபோன்று அனைத்துத் துறைகளிலும் அனுமதியைப் பெற இருபது மாதங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. தமிழகத்திலேயே இப்படி எனில்,  இந்திய அளவில் இது இன்னமும் அதிக நேரம் எடுக்கும்.  ஒற்றை சாளர முறையை அறிமுகம் செய்தால்தான் இந்தியா தரவரிசையில் முன்னேறும்.’’

‘‘சட்டங்களை சீர்திருத்த வேண்டும்’’!
டாக்டர் என்.ஆர்.டவே தலைவர், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.

‘‘நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி வாங்குவதில் ஆரம்பித்து, பதிவு செய்வதில் காலதாமதம், பணியாளர் சட்டத் திருத்தங்கள் என பல சிக்கல்கள் இருக்கின்றன. நிலம் கையகப்படுத்துதல் என்பதும்  பெரிய சவாலாக இருக்கிறது. இதனையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தொழில் தொடங்குவதில் காலதாமதம் என்கிற பிரச்னை தீர்ந்து, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியா இந்தத் தரவரிசையில் முன்னேறும்.''

- முக நூல்
-ந.விகடன்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum