Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


செபி அதிரடி...மதுரை MRDT - க்கு தடை !

Go down

செபி அதிரடி...மதுரை MRDT - க்கு தடை !

Post by தருண் on Fri Nov 07, 2014 9:26 am

‘மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எம்ஆர்டிடி (Madurai Rural Development Transformation India Ltd) மற்றும் எம்.டி.ஆர்.எஃப் (Madurai Rural Development Benefit Fund (India) Limited) நிறுவனங்கள் உடனடியாக மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்’ என அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி.

மதுரை எம்ஆர்டிடி நிறுவனம் குறித்து நாணயம் விகடனில் ஏற்கெனவே இரண்டு இதழ்களில் உஷார் கட்டுரை எழுதி வெளியிட்டோம். பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டு களைத் திரட்டவும், பங்குகளை வெளியிடவும் அரசின் அங்கீகரிக்கப் பட்ட அமைப்புகளிடமிருந்து எந்த ஒரு அனுமதியும் இந்த நிறுவனம் வாங்கவில்லை என்பதை ஆதாரங் களுடன் கடந்த வாரங்களில் வெளியிட்டோம். இந்த நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்ட செபி (Securities and Exchange Board of India) எம்ஆர்டிடி பற்றி பல கோணங்களில் விசாரித்து, இப்போது தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.செபியானது அக்டோபர் 27-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ‘எம்ஆர்டிடி, எம்டிஆர்எஃப் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; இந்த நிறுவனங்களின் சொத்துக்களை விற்கக்கூடாது; பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை வேறு எங்கும் மாற்றக்கூடாது; செபி அமைப்பின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப அளிப்பதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. செபியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் மீதான காவல்துறை நடவடிக்கை மேலும் தீவிரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த நிறுவனம் இனிமேல் பங்கு வெளியீடு, கடன் பத்திர வெளியீடு, முன்னுரிமை பங்கு வெளியீடு என எந்தவொரு வகையிலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணத்தைத் திரட்டக் கூடாது. நிறுவனமோ, நிறுவன இயக்குநர் கள் அவையில் உள்ளவர்களோ, எந்த ஒரு சொத்தையும், கணக்கு விவரங்களை யும் திசை திருப்புவதோ அல்லது வேறு பெயர்களுக்கு மாற்றுவதோ கூடாது என்பதையும் இந்த உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிறுவனமும், நிறுவன இயக்குநரவையைச் சேர்ந்தவர்களும் பங்குச் சந்தை சார்ந்த வர்த்தகங்களில் ஈடுபடுவதைத் தடை செய்வதுடன், அடுத்த 21 நாட்களுக்குள் செபி கோரும் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது. அந்த நிறுவனம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, தமிழ்நாடு காவல்துறை போன்றவற்றுக்கு உரிய தகவல்களை செபி அளித்துள்ளது.
எம்ஆர்டிடியின் தகிடுதத்தங்களை பரந்துபட்ட மக்களின் கவனத்துக்கு நாணயம் விகடன் கொண்டு வந்த போதிலும், இந்த நிறுவனத்தைக் கடந்த சில காலமாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது செபி. குறிப்பாக, இந்த நிறுவனம் தொடர்பான சில முக்கிய விவரங்களை 2013 ஜூலை மாதமே கேட்டது. இதன்பிறகு இந்த நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தது. செபியின் கேள்விகளுக்கு எம்ஆர்டிடி சரிவர தகவல்களை அளிக்கவில்லை.
தனது ஆய்வில் கிடைத்த தகவல்கள் மற்றும் தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் மூலம் கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்து, மேலும் இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு எழுதியது செபி. இதன் தொடர்ச்சியாக 2014 ஜூன் 16 அன்று ‘கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்’ என்கிற திட்டத்தின் கீழ் பொதுமக்களிட மிருந்து பணம் திரட்டப்படுகிறதா என்று எம்ஆர்டிடி நிறுவனத்திடம் சில விவரங்களைக் கேட்டு கடிதம் எழுதியது.செபி உத்தரவை மீறும் பிஏசிஎல்!

பிஏசிஎல் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்வதை தடை செய்ததுடன், இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என செபி மீண்டும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிஏசிஎல் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் செபி உத்தரவிட் டிருந்தது. மேலும், பொதுமக்களிடமிருந்து திரட்டிய சுமார் ரூ.49 ஆயிரம் கோடியையும் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என சொல்லியிருந்தது.

செபியின் இந்த உத்தரவுகளைப் பின்பற்றாத பிஏசிஎல் நிறுவனம், பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவதை நிறுத்தாமல், தொடர்ந்து வசூல் செய்துவருவதாக பொதுமக்களிடமிருந்து செபிக்கு புகார்கள் வந்திருக்கிறது.
செபியின் உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் எதையும் கடைப்பிடிக்காத நிலையில் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவது சிவில் மற்றும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ள செபி, இந்த நிறுவனத்தின் மீது பொருளாதார மோசடி மற்றும் ஏமாற்றுதல், பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கலாம் என மாநில காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் குறித்து மும்பையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணை நடத்தத் தொடங்கியது. பிஏசிஎல் நிறுவனம் வசூல் செய்த பல ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுவதால், இந்த விசாரணை இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த கம்பெனி விவகாரத் துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செபி கேட்டுக் கொண்டுள்ளது.

இனியும், பிஏசிஎல் நிறுவனத்தை நம்பி மக்கள் பணம் கட்டினால் அவர்கள் கதி அதோ கதிதான்!
இந்தக் கடிதத்துக்கு கடந்த ஜூன், 18 அன்று செபிக்குப் பதில் கடிதம் எழுதிய எம்ஆர்டிடி நிறுவனம், செபியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கால அவகாசம் கேட்டது. 15 நாட்கள் கால அவகாசம் தந்த நிலையிலும், கேட்ட கேள்விகளுக்கு எம்ஆர்டிடி நிறுவனம் எந்தப் பதிலையும் இதுவரை அனுப்பவில்லை. கம்பெனிச் சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பல சட்டங்களையும் எம்ஆர்டிடி மீறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு எம்ஆர்டிடி,எம்டிஆர்எஃப் நிறுவனங்களின் மீது தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது செபி.
--முக நூல்

--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum