Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


குறையும் பாதுகாப்புச் செலவு... தொடரும் சைபர் குற்றங்கள்...!

View previous topic View next topic Go down

குறையும் பாதுகாப்புச் செலவு... தொடரும் சைபர் குற்றங்கள்...!

Post by தருண் on Fri Oct 24, 2014 7:17 pm

சமீப காலமாக ஆன்லைன் தொடர்பான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புக்காகச் செய்துள்ள செலவு 17% குறைந்துள்ளதாக பி டபிள் யூ சி நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சைபர் குற்றங்கள்

நம் நாட்டில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், 2014-ம் ஆண்டின் செப்டம்பர் மாத நிலவரப்படி கூகுளிடமிருந்து 50 லட்சம் பயனாளிகளின் பாஸ்வேர்டுகள் இணைய ஹேக்கர்களால் வெளியாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனாலேயே இந்திய அரசு மிக முக்கியத் தகவல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் முக்கியமான தகவல்கள் சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்குவதை தடுக்க வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜி-மெயில் வலைதளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனவும், இதற்கான ஒப்புதலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மத்திய அரசாங்கம் வழங்கி இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரின் இந்த நடவடிக்கையானது இந்தியாவின் அரசு அலுவலகங்களில் உள்ள மிக முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்காக நடைமுறை படுத்தப்படவுள்ளது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையானது வருகிற மார்ச், 2015-க்குள் செய்து முடிக்கப்படும் என்றும், மாற்று திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்திருக்கிறார்.

நம் நாட்டில் சைபர் குற்றங்கள் குறித்த விவகாரங்கள் இப்படி இருக்க, அமெரிக்காவில் இன்னும் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்க கள்ளச் சந்தையில் கிரெடிட் கார்டு நம்பரைவிட நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் 10 மடங்கு அதிக விலைக்குப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் திருடுபோகும் மருத்துவ விவரங்கள்!

"அமெரிக்க மருத்துவமனைகளின் ஹெல்த்கேர் ஆபரேட்டர்களான கம்யூனிட்டி ஹெல்த் சிஸ்டம்ஸ் (Community Health Systems) நிறுவனத்தின் கணினியில், சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் உள்நுழைந்து 4.5 மில்லியன் நோயாளிகளின் பெயர், அவர்களின் பிறந்த தேதி, கட்டண விவரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசி எண், நோய் சம்பந்தப்பட்ட ஆய்வுக் குறியீடுகள் ஆகியவற்றைத் திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள்" என அமெரிக்காவின் ஃபெடரல் பெரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation) அமைப்பு தெரிவித்துள்ளது.

மோசடிக்காரர்கள் இந்த விவரங்களைப் பயன்படுத்தி போலியான ஐடி-க்களைத் தயாரித்து மருந்து உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி மறு விற்பனை செய்கிறார்கள் என்கிற விவரமும், மேலும் அவர்கள் பாலிசி சார்ந்த விவரங்களை, நோயாளிகளின் விவரங்களைப் பயன்படுத்திக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து க்ளைம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற விவரமும் தெரியவந்துள்ளது. இப்படி திருடப்படும் நோயாளியின் விவரங்களை மோசடிக்காரர்கள் அமெரிக்க கள்ளச் சந்தையில் 10 டாலருக்கு ( இந்திய மதிப்பி்ல் சுமார் ரூ.600) விற்றுவிடுகிறார்களாம். இது அமெரிக்க கிரெடிட் கார்டு நம்பருக்கு வழங்கும் விலையைவிட பத்து மடங்கு அதிகம் என்பது ஆச்சர்யமான விஷயம்.இதுபோன்ற திருட்டுகள் 2009-ம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்தது எனவும், அது 2013-ம் ஆண்டில் 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது எனவும் அமெரிக்காவின் Ponemon Institute மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.


டிராப்பாக்ஸ் திருட்டு

அதேபோல, சில வாரங்களுக்கு முன்பு போஸ்ட்பின் என்கிற வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் 400 டிராப்பாக்ஸ் கணக்கர்களின் பயனாளர் எண் மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தான் டிராப்பாக்ஸ் சர்வரை ஹேக் செய்துவிட்டதாகவும், தன்னிடம் தற்போது சுமார் 7 மில்லியன் டிராப்பாக்ஸ் கணக்காளர்களின் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு இருப்பதாகவும், அதற்குத் தகுந்த பணத்தை யார் வழங்க முன்வருகிறார்களோ அவர்களுக்கு டிராப்பாக்ஸ் கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க தயார் எனவும் தெரிவித்திருக்கிறார். இது டிராப்பாக்ஸ் பயனாளர்கள் எல்லோரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

பாதுகாப்புச் செலவு குறைந்துள்ளது

இதுபோன்ற சைபர் க்ரைம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு குறைந்து வருவதாக பிடபிள்யூசி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சர்வே அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறது. அந்த ஆய்வறிக்கையில், "சைபர் பாதுகாப்புக்காக இந்திய நிறுவனங்கள் செய்துள்ள சராசரி செலவுகள் 24.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 29.28 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், ஓர் இந்திய நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புக்கான தனிப்பட்ட செலவானது 11,834 ரூபாயிலிருந்து (2013), தற்போது 25,254 ரூபாயாக (2014) அதிகரித்திருக்கிறது (20%)" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களின் முழுமையான தாக்கங்களைப் புரிந்துகொள்ளாமல் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்களை முன்னேற்றிக்கொள்வதற்காக அந்தப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதும் சைபர் குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் எனவும், இதனாலேயே சைபர் குற்றங்கள் குறித்த அதிகமான அச்சுறுத்தல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள் வளர வளர, சைபர் குற்றங்களும் வளர்ந்து வருவது வருந்தத்தக்க விஷயமே. அதைத் தடுக்க முடியாவிட்டாலும், பாதுகாக்க வேண்டியது நாட்டை ஆளும் அரசின் கடமையாக உள்ளது. அதேசமயத்தில், ஆன்லைன் பயனாளர்கள் அனைவரும் அவரவர்களின் தகவல்களைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

-முக நூல்

-ந.விகடன்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum