Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


கேட்ஜெட்: ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்!(HP 10 PLUS Tablet)

View previous topic View next topic Go down

கேட்ஜெட்: ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்!(HP 10 PLUS Tablet)

Post by தருண் on Sat Oct 18, 2014 12:22 pm

இன்றைய உலகில் டேப்லெட்களின் பங்களிப்பு ஏராளம். ஆபீஸ் டாக்குமென்ட்ஸ் எடிட்டிங், நெட் ப்ரவுஸிங், இ-புக் வாசிப்பு என டேப்லெட்டின் உபயோகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஹெச்.பி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான, ‘ஹெச்.பி 10 பிளஸ்’ டேப்லெட்டை (HP 10 PLUS Tablet) அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.17,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்போவதாக ஹெச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.18,500-க்கு விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி-பீன் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும்போது இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்-கேட் புதிய இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குவது இதற்குச் சாதகமான விஷயம்.



10.1 இன்ச் HD தொடுதிரையைக் கொண்டுள்ள ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட், 1 GHz குவாட்-கோர் கோர்டெக்ஸ் A7 பிராசஸர் மற்றும் 2GB DDR3L ரேம்மைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 1.2 GHz டுயல் - கோர் பிராசஸர் மற்றும் 1GB ரேம்மைக் கொண்டுதான் இயங்குகிறது.

5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் - கேமராவைப் பெற்றுள்ள இந்த டேப்லெட், 16 GB இன்டர்னல் மெமரி யோடு வருகிறது. இதை SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மொத்த எடை 662 கிராம் மட்டுமே. ஆனால் 3 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 8 GB இன்டர்னல் மெமரியோடு தான் வருகிறது. இதையும் SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். Wi-Fi 802.11 b/g/n, GPS, ப்ளூ-டூத் 4.0 மற்றும் மைக்ரோ USB ஆகிய வசதிகளோடு 7700 mAh சக்தி வாய்ந்த பேட்டரியைக் கொண்டிருப்பதும் சாதகமான விஷயமே!

ந. விகடன்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum