Latest topics
» ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்!
by தருண் Fri Jan 13, 2017 11:13 am

» உங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:49 am

» பிரீமியம் ஃபர்ஸ்ட்... மற்றவை நெக்ஸ்ட்!
by தருண் Fri Jan 13, 2017 10:28 am

» கணக்கில் காட்டாத பணம்... வரி எவ்வளவு? அபராதம் எவ்வளவு?
by தருண் Fri Jan 13, 2017 10:20 am

» பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... பளிச் 5 வழிகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:10 am

» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?
by தருண் Fri Jan 13, 2017 10:05 am

» ஃப்ளாட் வாங்கப் போறீங்களா..? 5 முக்கிய செக் லிஸ்ட்
by தருண் Mon Jan 09, 2017 2:10 pm

» கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா!
by தருண் Mon Jan 09, 2017 2:07 pm

» சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ்
by தருண் Mon Jan 09, 2017 2:03 pm

» வருமானத்தில் வரலாறு படைத்த ஃபண்டுகள்!
by தருண் Mon Jan 09, 2017 1:58 pm


செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில்

View previous topic View next topic Go down

செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில்

Post by தருண் on Sun Oct 05, 2014 7:18 pm

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங் தொடங்கியது.

சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போன்களை இன்றைய இளைஞர் கள் வாங்கத் துடிப்பதை ஆன்லைன் நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. இனி எந்த போனையும் தொட்டுப் பார்த்து வாங்கத் தேவையில்லை. நல்ல பிராண்ட் நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் கள் நன்றாகவே இருக்கும் என எல்லோரும் நினைப்பதால், பலரும் ஆன்லைனிலேயே வாங்க விரும்பு கின்றனர்.

தவிர, கடைகளைவிட 10% விலையும் குறைவாகக் கிடைப்பது, வீடு தேடி பொருள் வந்துவிடுவது ஆகிய காரணங்களினாலும் பலரும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே விரும்புகின்றனர். இதனால் கடைகளில் செல்போன் விற்பனை 12 - 14% குறைந்துள்ளதாம்.இத்தனை நாட்களாக ஆன்லைன் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பொறுமையாகப் பார்த்துவந்த நேரடி விற்பனை நிறுவனங்கள், இப்போது அதற்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றன. முதல் முயற்சியாக, செல்போன்களை நேரடியாக விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இதுகுறித்து யுனிவர்செல் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ்பாபுவிடம் பேசினோம்.

‘‘இன்று சில செல்போன் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் செல்போன் விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் ரீடெயில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். எங்களுக்கு பாதிப்பு என்பதற்காக நாங்கள் ஒன்று சேரவில்லை. ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பதற்காக பயன்படுத்தும் வியாபார முறை சரியானதாக இல்லை. நாங்கள் சரியான விலையில் செல்போன்களை விற்பனை செய்கிறோம். ஆனால், ஆன்லைன் நிறுவனங்களோ, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடமிருந்து திரட்டிய நிதியைக் கொண்டு சலுகை தருவதன் மூலம் விலையைக் குறைத்து விற்பனை செய்கின்றன.

இந்த நியாயமற்ற வர்த்தகத்தை எதிர்க்கவே இந்திய அளவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இதன்மூலம் உற்பத்தியாளர்களை அணுகி ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இதுநாள்வரை ஒவ்வொரு செல்போன் நிறுவனத்தையும் ஒரு பிராண்ட்-ஆக மாற உதவி செய்தவர்கள் நாங்கள். ஒரு பிராண்ட் ஆக வளர்ந்து, மக்களின் மனதில் இடம்பெற்ற பிறகு, எங்களை ஒதுக்கிவிட்டு, ஆன்லைன் நிறுவனங்களிடம் செல்வது தவறு என்று கூறியுள்ளோம்.

முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் ஆன்லைனில் மட்டும் செல்போன்களை விற்பனை செய்யும் ‘ஒன்லி ஆன்லைன்’ என்கிற செயலில் ஈடுபடுவதில்லை. சிறிய மற்றும் புதிய நிறுவனங்கள்தான் இந்த ‘ஒன்லி ஆன்லைன்’ என்கிற செயலில் ஈடுபடுகின்றன.

நீங்கள் நேரடியாக கடையில் பொருளை வாங்கும்போது, உங்களுக்கு ஒருவர் அந்த போனை டெமோ செய்து காட்டுவார். உங்களுக்கு இருக்கும் பல சந்தேகங்கள் குறித்து விளக்கம் தருவார். ஆனால், ஆன்லைனில் நீங்கள் செல்போன் வாங்கினால், பொருள் உங்கள் கைக்கு வந்து சேரவே இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். இடையில் போக்குவரத்தில் உங்கள் பொருள் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. சில நூறு ரூபாய் குறைவு என்பதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா?’’ என்று கேள்வியை எழுப்பினார் சதீஷ்பாபு.

இ-காமர்ஸ் துறைக்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதால், சில ஆன்லைன் நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களோடும், புதிய நிறுவனங் களோடும் இணைந்து தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. இந்த நிறுவனங்கள் ‘ஹைப் மார்க்கெட்டிங்’ என்ற விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றன என்கிறார் விஷயம் தெரிந்த சிலர். அது என்ன ‘ஹைப் மார்க்கெட்டிங்’ என்று கேட்கிறீர்களா?

அதாவது, குறிப்பிட்ட ஒரு பொருளை நீங்கள் வாங்க நினைத்தால், இந்த நேரத்தில் ‘புக்’ செய்யுங்கள் என்று பெரிய அளவில் பரபரப்பை உருவாக்கு கின்றன ஆன்லைன் நிறுவனங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் இந்த புக்கிங்கை சில நிமிடங்களிலேயே முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகின்றன.

இந்த சில நிமிடங்களில் மட்டும் ‘கிளிக்’ செய்தவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்த பொருளை வாங்க நாம் ஆர்டர் கொடுக்கலாம். அந்த நேரத்தில் நமது முக்கிய விவரங்களை அளித்துவிட்டால், அவர்களே நம்மிடம் எப்போது பொருளை வாங்கப் போகிறீர்கள் என்று பத்து, பதினைந்து மின்னஞ்சல்களை அனுப்பி கேட்கின்றனர்.

ஆக, ஒரு பரபரப்பை ஏற்படுத்தி எல்லோரையும் ஒரு பொருளை வாங்கச் செய்வதே இந்த டெக்னிக். இதைத்தான் ஹைப் மார்க்கெட்டிங் (hype marketing) என்கிறார்கள்.

இந்த முறையைப் பயன்படுத்திதான் இன்றைக்கு ஆன்லைன் நிறுவனங்கள் செல்போன் முதல் புத்தகங்கள் வரை பல பொருட்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றன.

ஆன்லைன் நிறுவனங்கள் சமீபகாலமாக செயல்படுத்தத் தொடங்கி இருக்கும் இந்த ஹைப் மார்க்கெட்டிங் கினால், நேரடியாக பொருட்களை விற்கும் கடைகளுக்கு விற்பனை இழப்பு ஏற்படுவதோடு, வாடிக்கையாளர் களுக்கும் சில பாதகம் ஏற்படவே செய்கிறது. குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு திடீரென செயற்கையாக ஒரு டிமாண்ட் உருவாக்கப்படுகிறது.

இதனால் அந்த பொருளின் விலை உயரவும் வாய்ப்பு உருவாகிறது. இந்த நேரத்தில் வாங்கினால் தான் உண்டு; இல்லாவிட்டால் அந்த பொருளை பெற காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுமாதிரி பல டென்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்றன. ஆனாலும் ஆன்லைனில் முண்டியடித்து பொருட்களை வாங்கத்தான் இன்றைய தலைமுறை யினர் விரும்புகின்றனர்.

தவிர, நேரடியாக கடைகளில் வாங்குவதைவிட குறைந்த விலையில் கிடைப்பதால், இன்றைய இளைஞர்களின் முதல் சாய்ஸ் ஆன்லைனாகவே இருக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற மாதிரி நேரடி விற்பனைக் கடைகளுக்கும், ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நடக்கும் போட்டி யில், அதிக சலுகைகளை யார் அள்ளித் தருகிறார்களோ, அவர்களின் பக்கமே வாடிக்கையாளர்கள் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
-விகடன்

தருண்

Posts : 1255
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum