Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


திடீர் விலை வீழ்ச்சி பங்குகளை வாங்கலாமா?

Go down

திடீர் விலை வீழ்ச்சி பங்குகளை வாங்கலாமா?

Post by தருண் on Fri Sep 12, 2014 11:04 am

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் பெரிய சரிவு காணப்படாத நிலையில், பங்குச் சந்தையில் சில நல்ல நிறுவன பங்குகளின் விலைகள் தடாலென்று 40 முதல் 50 சதவிகிதம் வரையில் சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் சரிகின்றன. இந்த மாதிரியான வீழ்ச்சிகள், சில காலத்துக்கு மட்டுமே பேசப்படு கின்றன.

பொதுவாக, இதுபோன்ற பங்குகளை யாருமே பரிந்துரைக்க மாட்டார்கள் அல்லது முதலீட்டாளர்களும் ஒருவித அச்சம் காரணமாக , வாங்குவதைத் தவிர்க்கவே செய்கிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட பங்குகளின் விலை சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ கழித்துப் பார்க்கும்போது, நாம் அத்தகைய முதலீடுகளைச் செய்யாமல் இருந்தது தவறோ என்று தோன்றுகிறது. இனி இவற்றை விரிவாகப் பார்ப்போம்.
முதலில் எந்த மாதிரியான செய்திகளினால் பங்குகள் இறக்கமடைகின்றன என்பதைப் பார்க்கலாம்.

1) நிறுவனங்களின் செயல்பாடுகளில், குறிப்பாக கணக்கு வழக்குகளில் நடைபெறுகின்ற முறைகேடுகள், ஊழல் (scams).2) நிறுவனங்கள் மேற்கொள்கிற கையகப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் (acquisition & expansion).

3) பெரிய அளவிலான அந்நியக் கடன் சுமைகளைச் சுமப்பது (FCCBS).

4) நம் நாட்டின் மருந்து நிறுவனங் களுக்கு, பன்னாட்டு கட்டுப்பாடுகளின் காரணமாக ஏற்படுகின்ற சிக்கல்கள், (Food and Drug Regulations).

5) அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிவின் காரணமாக நிறுவனங்களுக்கு ஏற்படுகிற இழப்பு (Ruppe Depreciation ).

6) வங்கிகளின் கடன் பளுவானது அதிகரிக்கும்போது (NPA ).

மேலே குறிப்பிட்ட காரணங்களால் கீழ்க்கண்ட பங்குகள் பெரியளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
1 முறைகேடுகள் காரணமாக பங்குகள் இறங்குவது...

இதற்கு உதாரணம் - சத்யம் கம்ப்யூட்டர். கடந்த 2009-ல் ஏற்பட்ட முறைகேடு கள் காரணமாக 10 ரூபாய்க்கும் குறைவாக

வர்த்தகம் நடைபெற்றது, பிறகு 2011 ஏப்ரல் மாதத்தில் 17 சத்யம் பங்குகளுக்கு 2 டெக் மஹிந்திரா பங்குகள் என்ற விகிதத்தில் டெக் மஹிந்திராவுடன் இணைக்கப் பட்டது.

2011 அக்டோபர் மாதத்தில் டெக் மஹிந்திரா பங்கின் குறைந்தபட்ச விலையே ரூ.524

2009-ல் சத்யம் கம்ப்யூட்டர் பங்கில் முதலீடு செய்திருந்தால் 2 வருடம் கழித்து நிச்சயம் அதிக லாபம் பார்த்திருக்க முடியும்

2 நிறுவனங்கள் மேற்கொள்கிற கையகப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள்...
இதற்கு எடுத்துக்காட்டு - அப்போலோ டயர்ஸ்.

இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கூப்பர் டயர் ரப்பர் கம்பெனி (Cooper Tire & Rubber Company) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதாக 2013 ஜூன் மாதத்தில் அறிவித்தது.

இந்தப் பங்கானது அப்போது ரூ.90 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இந்த அறிவிப்புக்கு பிறகு 40% மேல் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் இப்போது, இதே பங்கு 170 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிறது.

3அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிவின் காரணமாக நிறுவனங்களுக்கு ஏற்படுகிற இழப்பு...
சென்ற வருடம் நம் ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 68-க்குக் கீழ் காணப் பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனப் பங்குகள் மிகவும் சரிந்து காணப்பட்டன.

எடுத்துக்காட்டாக 2013 ஜூலையில் 350 ரூபாய்க்கு வர்த்தகமான பிபிசிஎல் பங்கானது, ஆகஸ்ட் மாதத்தில் 260 ரூபாய்க்கு குறைந்தது.

ஆனால், தற்போது 600 ரூபாய்க்கு அருகாமையில் வர்த்தகம் நடைபெறுகிறது (ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றுள்ளதால்).

4பெரிய அளவிலான அந்நியக் கடன் சுமைகளைச் சுமப்பது எஃப்சிசிபி (Foreign currency convertible bonds) பற்றி 2012 துவக்கத்தில் அதிகமாகப் பேசப் பட்டது.

ஏனெனில் முன்னணி நிறுவனங்கள், அந்நிய செலாவணியில் கடன் வாங்கியது. டாடா மோட்டார்ஸ் / டாடா ஸ்டீல்/ ஜே எஸ்டபிள்யூ / சுஸ்லான் / சின்டெக்ஸ் / ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ரூபாயின் மதிப்பு கீழ்நோக்கி நகர ஆரம்பித்தவுடன், பங்குகளின் விலை மளமள என்று சரிந்தது.

ஆனால், இப்போது இதே நிறுவனங் களின் பங்கு விலைகளை நாம் சொல்லத் தேவையில்லை. அவற்றின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. 5 பன்னாட்டு கட்டுப்பாடுகளின் காரணமாக நம் நாட்டின் மருந்து நிறுவனங்களுக்கு ஏற்படுகிற சிக்கல்கள்...

இதற்கு உதாரணம் ரான்பாக்ஸி/ வொக்கார்ட் போன்ற பங்குகள்.

கடந்த 8 மாதங்களிலேயே 50% மேலான ஏற்றத்தை அடைந்துள்ளன. ஸ்ட்ரைட்ஸ் அர்கோலாப் (Strides Arcolab) பங்கானது கடந்த டிசம்பர் 2013-ல் 900 ரூபாயில் வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிறுவனம் 1 பங்குக்கு ரூ.500 டிவிடெண்டாக அறிவிப்பு வெளிட்டதைத் தொடர்ந்து 360 ரூபாய்க்கு இறங்கி, தற்போது ரூ.660 அளவில் வர்த்தகமாகிறது.

6வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கும்போது...

பெரும்பாலான பொதுத்துறை நிறுவன வங்கிகள் அனைத்தும் சென்ற வருடம் நிகர வாராக் கடன் (NPA) அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து மிகவும் குறைந்து வர்த்தகமாகின. ஆனால் இன்று அந்தப் பங்குகளின் விலைகள் 80% மேல் ஏற்றம் பெற்றுள்ளன.

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா - இந்தப் பங்கின் விலை இந்த வருடம் துவக்கத்தில் 80 ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்த வங்கியின் கணக்குகளில் சில குறைபாடுகள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ரூ.25க்கு கீழ் இறக்கம் கண்டது.

ஆனால், இதே பங்கு இன்று ரூ.50க்கு மேல் வர்த்தகமாகிறது. சமீபத்தில்கூட சிண்டிகேட் வங்கியின் பங்கு, வங்கியின் தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் காரணமாக இறக்கம் கண்டுள்ளது. வருகிற காலங்களில் இதன் விலை ஏறுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதேபோல், எம்சிஎக்ஸ் / எஃப்டிஎல்/ என்டிபிசி போன்ற பங்குகள் பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்தாலும், காலப்போக்கில் அதிலிருந்து மீண்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

இப்படி பங்கின் விலை வீழ்ச்சி காணும்போது, எந்த பிரச்னையால் பங்கின் விலை இறங்கி இருக்கிறது. அது தீர்க்கப்படக்கூடியதா? அந்த நிறுவனம் மீண்டும் சிறப்பான செயல்பாட்டுக்கு வருமா? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அந்த நிறுவனத்துக்கு இது தற்காலிக பிரச்னைதான் அல்லது அது பிரச்னையை விரைவில் தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை இருந்தால், அதன் பங்குகளில் விலை வீழ்ச்சி அடையும்போது முதலீடு செய்தால் லாபம் பார்க்க முடியும்.

மேலும், குறிப்பிட்ட பிரச்னையில் அரசு தலையிட்டு சரி செய்யும் என்று தெரிந்தால், அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். நிதிநிலை மிகவும் மோசமான காரணத்தால் ஒரு நிறுவனப் பங்கின் விலை கண்டபடி இறங்கினால் வாங்கக்கூடாது. அதேபோல் ஏதாவது பிரச்னை காரணமாக பங்கின் விலை இறங்கும் நிலையில் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையிலும் முதலீடு செய்யக்கூடாது.

மொத்தத்தில், சில விதிவிலக்குகள் (உதாரணத்துக்கு கிங்ஃபிஷர்) இருந்தாலும், சற்று ரிஸ்க் எடுப்பவர்கள், இத்தகைய தனிப்பட்ட பங்குகள், குறிப்பாக பொதுத்துறை நிறுவனப் பங்குகள், 40-50% மேல் வீழ்ச்சியைச் சந்திக்கிற பங்குகளின் மீதான முதலீடு சில வருடங்களில் நல்ல லாபத்தைத் தருவதைக் காணமுடிகிறது.

அதேசமயம், இதுபோன்ற வீழ்ச்சியடைந்த பங்குகளில் முதலீடு செய்யும்போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக பங்குச் சந்தையைப் பற்றிய ஞானம் அதிகம் உள்ளவர்கள், செய்திகளை விடாமல் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், அரசின் கொள்கை முடிவுகளை அலசக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள், பொருளாதாரத்தைப் பற்றிய தொலைநோக்கு பார்வையுடையவர்கள் போன்றோர்களே, இதுபோன்ற வீழ்ச்சியடையும் பங்குகளில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். மற்றவர்கள்(இவர்கள்தான் மெஜாரிட்டி) பேராசைப்பட்டு முதலுக்கு மோசம் போய்விடக் கூடாது.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum