Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


ஸியோமி எம்ஐ3 மீண்டும் அதிரடி விற்பனை!(XiaoMi)

View previous topic View next topic Go down

ஸியோமி எம்ஐ3 மீண்டும் அதிரடி விற்பனை!(XiaoMi)

Post by தருண் on Wed Aug 27, 2014 3:43 pm

ஸியோமி எம்ஐ 3 ஸ்மார்ட்போன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.சீனத்தயாரிப்பான இந்த ஸியோமி எம்ஐ3 கடந்த நான்காண்டுகளுக்கு முன் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டது.

பல்வேறு ரக போன்களை தயாரித்தாலும் இதன் எம்ஐ3 என்ற மாடல் நிறுவனத்தை சீனாவின் நான்காவது மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறது. முதலில் மென்பொருள் நிறுவனாக துவங்கப்பட்டு வெற்றி கண்டபின் 2011ம் ஆண்டு எம்ஐ1 என்னும் தனது முதல் மொபைல் சாதனத்தை வெளியிட்டது.



அன்றிலிருந்து இன்று வரை லாபத்தை மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தை சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் , ஆப்பிளும்,ஸியோமியும் வன்பொரும் மற்றும் மென்பொருளைத் தங்கள் சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு உற்பத்தி ஆப்பிள் நிறுவனத்தை மிஞ்சிவிட்டது. சீனா, ஹாங்காங், மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே கிடைத்துவந்த இந்த மொபைல் இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஜீலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மொபைல் முதல் தவணையிலேயே 20,000 போன்கள் 39 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தன.

அதே போல, இந்த வாரம் வரையிலான நிலவரத்தில் மொத்தம் 95,000 போன்கள் விற்கப்பட்டுள்ளன. அடுத்த தவணை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் நிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பையும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையே சவாலான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்யோமி. பயனாளர்கள் பலரும் முன்பதிவு செய்ய ஒரே நேரத்தில் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தை பயன்படுத்தியதால் அந்த தளம் சில மணி நேரங்கள் முடக்கப்பட்டது என்றால் ஸ்யோமிக்கு இருக்கும் மவுசு பற்றி சொல்லவா வேண்டும்!.

ஸியோமியின் வளர்ச்சி நடுத்தர மக்களுக்காகன ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கும் சாம்சங்,மோட்டோரோலா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகியவற்றின் சந்தையை பிடித்துள்ளது. அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதத்தில் 6000 ரூபாய் மதிப்பிலான ரெடிமி1எஸ் என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

-மா.அ.மோகன் பிரபாகரன்
-முக நூல்
-ந.விகடன்

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum