Latest topics
» ஏற்ற இறக்க சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற டிவிடெண்ட் பங்குகள்!
by தருண் Fri Jan 13, 2017 11:13 am

» உங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:49 am

» பிரீமியம் ஃபர்ஸ்ட்... மற்றவை நெக்ஸ்ட்!
by தருண் Fri Jan 13, 2017 10:28 am

» கணக்கில் காட்டாத பணம்... வரி எவ்வளவு? அபராதம் எவ்வளவு?
by தருண் Fri Jan 13, 2017 10:20 am

» பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... பளிச் 5 வழிகள்!
by தருண் Fri Jan 13, 2017 10:10 am

» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?
by தருண் Fri Jan 13, 2017 10:05 am

» ஃப்ளாட் வாங்கப் போறீங்களா..? 5 முக்கிய செக் லிஸ்ட்
by தருண் Mon Jan 09, 2017 2:10 pm

» கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா!
by தருண் Mon Jan 09, 2017 2:07 pm

» சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ்
by தருண் Mon Jan 09, 2017 2:03 pm

» வருமானத்தில் வரலாறு படைத்த ஃபண்டுகள்!
by தருண் Mon Jan 09, 2017 1:58 pm


மனை வாங்குவோர் உஷார்... ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை!

View previous topic View next topic Go down

மனை வாங்குவோர் உஷார்... ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை!

Post by தருண் on Thu Aug 21, 2014 3:40 pm

பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு மனை வாங்கி வருகிறார்கள். காரணம், வீட்டு மனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான். 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு 30 லட்சத்துக்கும் 40 லட்சத்துக்கும் விலைபோவதைப் பார்க்கும் மக்கள், இனிவரும் காலத்திலும் அப்படி ஒரு லாபம் கிடைக்கும் என்று நினைத்து காலி மனைகளை வாங்குகிறார்கள்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுக்க ஏராளமான ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் புதிது புதிதாக முளைத்து, பல லே-அவுட்டுகளைப் போட்டுவருகின்றன.

குறையும் ச.அடி!

பத்தாண்டுகளுக்குமுன் மனை லே-அவுட்டில் குறைந்தபட்ச மனை அளவு 1,200 சதுர அடியாக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குமுன் இது 800 ச.அடியாகக் குறைந்தது. பிற்பாடு இது 600 ச.அடியாகக் குறைந்து, இப்போது வெறும் 400 அடிக்குக்கூட பிளாட்களைப் போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி மனை அளவைக் குறைப்பதால், மனைக்கான தொகையும் குறைந்து விடுகிறது. இதனால் சாதாரண மனிதர் கள்கூட மனை வாங்கக்கூடியதான நிலை உருவாகிவிடுகிறது. மேலும், மாத தவணை என்கிறபோது முன்பணம் ரூ.10,000, ரூ.15,000 வாங்கிக்கொண்டு, மீதிப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டச் சொல்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் (சதுரங்க) வேட்டை!

மனைகளை மாத தவணைத் திட்டத்தின் மூலம் விற்பதில் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, ஶ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்களிடம் சதுரங்க வேட்டை சினிமாவில் வருவதுபோல் ஒரு மெகா மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடி குறித்த தகவல்கள் சினிமாவைப்போலவே படுசுவாரஸ்ய மானவை.

வெறும் 100 மனைகளுக்கான லே-அவுட்டைப் போட்டுவிட்டு, ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் தவணைத் தொகை வசூலிக்கப் பட்டிருக்கிறது. இந்த நூறு மனைகளையும் முழுப் பணமும் கட்டியவர்களுக்குப் பத்திரம் பதிவு செய்து தந்துவிட்டு, லே-அவுட் போட்ட புரோமோட்டர் எஸ்கேப் ஆகி இருக்கிற கொடூரம் காஞ்சிபுரத்தில் நடந்திருக்கிறது.

மூன்று லே-அவுட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எஸ்எஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரை காஞ்சிபுரம் போலீஸ் தேடி வருகிறது. இவர் ஆற்காடு வட்டம் மேல்நேத்தபாக்கம் உள்ளிட்ட இடங்களில் போட்ட தவணைமுறை திட்டத்தில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.

இந்தத் திட்டங்களில் சேர்ந்து, தவணைத் தொகையைக் கட்டி வருபவர் களில் பலருக்கு ரியல் எஸ்டேட் அதிபர் தலைமறைவாகி இருப்பதுகூடத் தெரியவில்லை. அவர்கள் இப்போதும் தவணைத் தொகையை ஏஜென்ட்டு களிடம் ‘கர்மசிரத்தையாக’க் கட்டி வருகிறார்களாம். இவர்கள் புரோமோட்டர் சதீஷ் மீது இதுவரை புகார் கொடுக்காமலே இருக்கிறார்களாம்.

ஏமாளி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள்!

பொதுவாக, இதுபோன்ற லே-அவுட் புரோமோட்டர்கள் மனைகளை விற்பதற்கு வேறு யாரையும்விட ஆயுள் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளையே தேர்வு செய்கிறார்கள். ஒரு மாத தவணை 1,500 ரூபாய் எனில், அதில் ஏஜென்ட் கமிஷன் 500 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியுள்ள 1,000 ரூபாயை ரியல் எஸ்டேட் கம்பெனிக்குக் கட்டினால் போதும் என்று சொல்லிவிடுவதால், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் வேறு எதையும் யோசிக்காமல், கண்ணைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழத் தயாராகிவிடுகிறார்கள்.

ஒரு ஏஜென்ட் 50 பேரை தவணை முறைத் திட்டத்தில் சேர்த்துவிட்டால், அவருக்கு மாத கமிஷன் மட்டும் சுளையாக 25,000 ரூபாய் கிடைத்துவிடும். இன்ஷூரன்ஸ் பாலிசி என்றாலே வேண்டவே வேண்டாம் என மக்கள் சொல்லும் இந்தச் சமயத்தில், மாதம் ரூ.25,000, ரூ.50,000 என்று வரும் வருமானத்தை அவர்களாலும் கண்டுகொள்ளாமல் இருக்க முடிவதில்லை.கொழுத்த கமிஷன் வருவதைப் பார்க்கும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் உடனே தங்கள் வாடிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்களை இதில் சேர்த்துவிடுகிறார்கள்.

ஒன்றுமறியாத ஏஜென்ட்டுகளை பகடைக்காய்போல பயன்படுத்தி, ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் ரியல் எஸ்டேட்டில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பதாக சதீஷ் மற்றும் அவரது மனைவி சௌமியா மீது காஞ்சிபுரம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், கால் கிரவுண்ட் மனை வாங்கினாலும் அதை விற்கும் புரோமோட்டரின் பின்னணி என்ன, அரசிடம் முறைப்படி அனைத்து அனுமதியையும் அவர் பெற்றிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்த்து வாங்குவது அவசியம் என்பது சாதாரண மக்களுக்குத் தெரிவதே இல்லை.

இதுபோன்ற ரியல் எஸ்டேட் மோசடியில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான். மகன் தொழில் செய்ய, மகளுக்குக் கல்யாணம் செய்துதர இன்று 50,000 ரூபாய் முதலீடு செய்தால், அது 5, 10 ஆண்டுகளில் 5 லட்சம் / 10 லட்சமாகி விடும் என்கிற ஆசையில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பணம் போனபின்பு பரிதவிக்கிறார்கள்.

இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் பத்திரிகைகளில் விளம்பரம் தராது. இவர்களின் செயல்பாடு பெரும்பாலும் மர்மமாகவே இருக்கும். புரோமோட்டர்கள் ஏஜென்ட்டுகளை முன்னிறுத்தியே எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

எஸ்எஸ் அசோசியேட்ஸ் நிறுவனத் திலும் இதேதான் நடந்திருக்கிறது. அதன் ஏஜென்ட்களையே உரிமையாளர்கள்போல் காட்டி, அக்ரிமென்டில் கையெழுத்தும் போட வைத்திருக்கிறது அந்த பலே நிறுவனம். ஏஜென்ட்டுகளும் தங்களுக்கு கம்பெனி கௌரவம் செய்வதாக காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுத் தள்ளி இருக்கிறார்கள். இப்போது பிரச்னை என்று வரும்போது மாட்டுவது இந்த ஏஜென்ட்களும்தான்.

இப்படி தவணையில் மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் குறித்து சென்னையை அடுத்தத் தாம்பரத்தைச் சேர்ந்த சூரியன் புரோமோட்டர்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான மணி விளக்கிச் சொன்னார்.

‘‘மனை வாங்குபவர்களும் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். தவணையில் மனை வாங்க போடப்பட்டும் அக்ரிமென்ட்டில் மனையில் உரிமை இல்லாத ஏஜென்ட்கள் கையெழுத்து போட்டால் அது செல்லாது.

மேலும், இப்படி போடப்படும் அக்ரிமென்ட்கள் உரிய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டுப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டி ருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் மனை வாங்குபவர்கள் அக்ரிமென்ட் போடும்போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.

இதேபோல், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதிலும் ஏஜென்ட்டுகள் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறார்கள். அப்போதும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. லே-அவுட் புரோமோட்டர் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டால், ரசீதில் கையெழுத்துப் போட்ட ஏஜென்ட்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

தவணையில் பணம் கட்டுபவர்களும் ஏஜென்ட்டுகள் கொடுக்கும் ரசீதுக்குப் பதில் கம்பெனியிடம் ரசீது கேட்டுப் பெறுவது பாதுகாப்பாக இருக்கும். உதாரணத்துக்கு, லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட ஏஜென்ட்டிடம் பணம் கொடுக்கிறோம். அவர் கொடுக்கும் ரசீதை நாம் பணம் கட்டிதற்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்வதில்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் ரசீதைதான் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல், ரியல் எஸ்டேட் தவணை திட்ட ரசீதுகளும் இருக்க வேண்டும். ஏஜென்ட் ரசீது கொடுத்தாலும், உங்களிடம் வாங்கப்பட்ட பணம், கம்பெனியில் வரவு வைக்கப்பட்டி ருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றவர் சற்று நிறுத்தி,

‘‘சில இடங்களில் ஏஜென்ட்டுகளும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பெனி யில் கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். சிலர் போலியாக ரசீது அடித்து ஏமாற்றுவதும் நடக்கிறது. அந்த வகையில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு சென்று அல்லது போன் மூலம் பணம் கட்டி வரும் விவரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏஜென்ட்டின் செல்போன் நம்பர் தவிர, நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் செல்போன் நம்பர்கள் மற்றும் அலுவலக லேண்ட் லைன் நம்பர்களையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஏஜென்ட்டுக்கு ஏதாவது நடந்தாலோ அல்லது அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனாலோ நீங்கள் மீதித் தவணையைக் கட்டி, மனையைப் பதிவு செய்ய முடியும்.

இப்படி குறைந்த விலைக்குத் தவணையில் விற்கப்படும் மனைகள் பெரும்பாலும் விலை போகாத இடமாகத்தான் இருக்கும். அந்த வகையில் லே-அவுட் பிரதான சாலை யிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் கவனித்துதான் வாங்க வேண்டும்” என்றவர், தவணைத் திட்டத்தில் மோசடிகளைத் தவிர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார்.

‘‘அண்மையில் அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்குபவர்கள், அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தைக் கட்டாயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ஃப்ளாட் வாங்குபவருக்கு அவரின் வீடு உறுதியாகக் கிடைக்கும் என்கிற நிலை உருவாக இருக்கிறது.

இதேபோல், தவணையில் விற்கப்படும் வீட்டு மனைகளுக்கும் அக்ரிமென்ட் போடப்பட்டு அது பதிவு செய்யப்படுவது கட்டாயம் என்று சட்டம் கொண்டு வந்தால் இதுபோன்ற மோசடிகள் தடுக்கப்படும். மக்களும் அச்சம் இல்லாமல் தவணையைத் தொடர்ந்து கட்டி வரலாம். அரசுக்கும் வருமானம் வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் ஏமாற்றுக்காரர்களும் வெளியேறிவிடுவார்கள்’’ என்றார்.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை மனையில் போடும் முன்பு, புரோமோட்டர்கள் மற்றும் ஏஜென்ட்டு களைப் பற்றிக் கொஞ்சம் விசாரிப்பது நல்லது.

ந.விகடன்

தருண்

Posts : 1255
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum