Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


உயரும் பொருளாதாரம்... அள்ளித் தரும் பங்குகள்!

View previous topic View next topic Go down

உயரும் பொருளாதாரம்... அள்ளித் தரும் பங்குகள்!

Post by தருண் on Fri Aug 01, 2014 9:29 am

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற ஒரு மாத காலத்தில் இந்திய பொருளாதாரத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பணவீக்க விகிதம் மற்றும் நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறைவு, உற்பத்தி மேம்பாடு போன்றவை பாசிட்டிவ் சென்டிமென்டை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குச் சந்தையும் புதிய உச்சத்தை எட்டும். அப்போது நல்ல பங்குகள் லாபத்தை அள்ளித்தரும் என்கிற புதிய எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

அண்மைக்காலமாக ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி.நாகராஜன் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

'இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு சுழற்சியை (சைக்கிலிங்) கொண்டதாக இருக்கிறது. ஏறக்குறைய 12 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு வளர்ச்சி, ஓர் இறக்கம் இருக்கும். பொதுவாக, பொருளாதாரம் மிக வேகமாக வளரும்போது, கூடவே பணவீக்க விகிதமும் அதிகரிக்கும்.

அப்போது ரிசர்வ் வங்கி, பணவீக்க விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும். அதன் ஒருபகுதியாக முக்கிய வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும். குறிப்பாக, கடனுக்கான வட்டியை அதிகரிக்கும். அதன் விளைவாக, பணவீக்க விகிதம் கட்டுக்குள் வந்ததும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்.



பொதுவாக, நான்கு வருட காலம் பொருளாதார வளர்ச்சி மேலே சென்றால், 6 வருடம் கீழே இறங்கும் என்பதுபோல்தான் கடந்த கால்நூற்றாண்டு காலமாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி இருந்து வருகிறது. இந்த ஏற்றமோ இறக்கமோ தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் இறக்கத்தில் இருந்து வந்தது. இதற்குக் காரணமாக, முந்தைய அரசு மீதான ஊழல் புகார்கள், திட்டங்கள் அமலாக்கம் குறித்த முடிவு எடுப்பதில் தாமதம் போன்றவை இருந்தன.
2010 டிசம்பரில் 9.1 சதவிகிதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி, 4.5 சதவிகிதமாகக் குறைந்து போனதற்கு முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தை மூலகாரணமாகக் குறிப்பிடலாம். விரைந்து முடிவு எடுக்கப்பட்டிருந்தால், ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகித அளவுக்குக் குறைவதற்குப் பதில் சுமார் 6 சதவிகிதம் என்கிற அளவுக்குதான் குறைந்திருக்கும்.

கடந்த இரு பொருளாதாரச் சுழற்சி யும் ஒரேமாதிரிதான் இருந்துள்ளது. அதேபோல்தான் இனி வரும் சுழற்சியும் இருக்க வாய்ப்புள்ளது. 2014ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட ஆரம்பித்திருக்கிறது. இது அடுத்துவரும் நான்கு வருடங்களுக்கு, அதாவது 201819 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 6 9% வரைகூட உயர வாய்ப்பிருக்கிறது. அதன்பிறகு பொருளாதார வளர்ச்சி தடைபட்டுவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. வளர்ச்சியில்லாமல் இருக்காது. வளர்ச்சி வேகம் சற்று குறையும், அவ்வளவுதான். அந்த காலகட்டத்தில் வளர்ச்சி மிகவும் குறைந்துபோகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு எடுக்கும்' என்றவர், தற்போது பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார்.

''நடப்பு கணக்குப் பற்றாக்குறை என்பது வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது, முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 4.5 சத விகிதத்திலிருந்து 2.1% அளவுக்குக் குறைந்திருக்கிறது. தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து நாட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் போது, நடப்பு கணக்குப் பற்றாக்குறை பிரச்னையாக இருக்காது. அடுத்து, பணவீக்க விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. நுகர்வோர் விலை குறியீடு இரட்டை இலக்கத்திலிருந்து (10%) ஒற்றை இலக்கத்துக்கு (7.3%) வந்துள்ளது. இது பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைக்கு பாசிட்டிவ்வான விஷயமாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறுகிய காலத்தில் 58க்கு கீழே இறங்க வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்போது, வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வரும். அப்போது ரூபாய் மதிப்புக் கூடும்.

அதேநேரத்தில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணும்போது, இறக்குமதி அதிகரிக்கக் கூடும். அப்போது ரூபாய் மதிப்புக் குறையக்கூடும். இந்த இரு நிலைகளிலும் ரூபாய் மதிப்பு 60 என்கிற அளவிலேயே இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது, ரூபாய் மதிப்பு பேலன்ஸ்டாக இருக்கும்.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்பிருப்பதால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. இனி வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் உள்நாட்டையே சார்ந்திருக்கிறது என்பதால், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த ஆண்டு பருவமழை கடந்த 15 தினங்களுக்கு முன்பு வரை மிகவும் குறைவாக இருந்தது. இப்போது நன்றாக மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. மேலும், மத்திய அரசு வசம், முக்கிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் கோதுமை போதுமான அளவுக்குக் கையிருப்பு இருக்கிறது என்பதால் இவற்றின் விலை அதிகரிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

தற்போது மெஜாரிட்டி அரசு அமைந்திருப்பதால், திட்டங்களை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுப்பதில் தடைகள் குறைவாக இருக்கும். முந்தைய அரசு முடிவெடுப்பதில் தாமதம் செய்ததால்தான் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளானது. இனி, அந்தப் பிரச்னை இல்லை என்பதால் நாட்டின் வளர்ச்சி தடையில்லாமல் இருக்கும்' என்றார்.



இந்தப் பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தை முதலீட்டுக்கு எந்த அளவுக்கு லாபகரமாக இருக்கும் என்பதை ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர், ஜி.சொக்கலிங்கம் விரிவாக எடுத்துச் சொன்னார்.

''வரலாற்றுச் சாதனையாக சென்செக்ஸ் புள்ளிகள் 26270ஐ தாண்டி இருக்கிறது. இந்த நிலையில் சந்தையில் முதலீடு செய்வதா, வேண்டாமா என பல முதலீட்டாளர்கள் குழம்பி நிற்கிறார்கள். முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தை குறித்த உண்மை ஒன்றை அறிந்துகொள்வது அவசியம்.

அதாவது, பங்குச் சந்தை குறியீடுகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும், பல தனிப்பட்ட பங்குகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்து இருக்கின்றன. அந்தவகையில் இப்போதும் முதலீட்டை மேற்கொள்ள லாம். மேலும், அடுத்த 6 12 மாதங்களுக்கு இந்திய சந்தை காளையின் பிடியில் இருக்கும்' என்றவர், அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.
''மத்தியில் நிலையான மற்றும் வலுவான ஆட்சி அமைந்திருப்பதால், அது நிலுவையிலுள்ள பொருளாதார சீர்திருத்்தங்களை விரைவாக நிறைவேற்றி வருகிறது. அண்மையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

தவிர, ஜூலை 15 வரையில், பருவமழை பொய்த்திருந்த நிலையில், அது தற்போது மேம்பட ஆரம்பித் திருக்கிறது. இந்திய ஜிடிபியில் வேளாண் துறையின் பங்களிப்பு சுமார் 18% அளவுக்கே இருப்பதால், இதன் பாதிப்பு பொருளாதாரத்தில் ஓரளவுக்கே இருக்கும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு (ஃபாரெக்ஸ்) இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார நிலை மேம்பட்டிருப்பது நம் நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதி அதிகரிப்புக்கு உதவும்' என்றவர், இதனால் பங்குச் சந்தை தரும் வருமானம் எப்படி இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
''2015 மார்ச்சுக்குள் பங்குச் சந்தை குறியீடுகள் இன்னும் 10% அதிகரிக்கக் கூடும். அதேநேரத்தில், பல தரமான மிட் கேப் பங்குகளின் விலை 20 30% வரை அதிகரிக்கும். இதில் சில பங்குகள் அடுத்த 2 3 ஆண்டுகளில் 50 100% வரை லாபம் அளிக்கக்கூடும்.

பெரும்பாலான லார்ஜ் கேப் பங்குகள், அதன் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகின்றன. அந்த வகையில், இன்னும் 2 3 ஆண்டுகளில் பல மிட் கேப் பங்குகள் முன்னணி பங்குகளாக மாறிவிடும். அந்தவகையில் அடுத்த 1 2 ஆண்டுகளில் கணிசமான வருமானம் தரும் ஐந்து பங்குகளைக் கவனிக்கலாம்' என்ற சொக்கலிங்கம், அந்தப் பங்குகள் பற்றி விளக்கினார்

கிளாரிஸ் லைஃப்சையின்ஸ் (Claris Lifesciences)

கடன் எதுவும் இல்லாத, ரொக்க இருப்பு அதிகம் கொண்ட பார்மா நிறுவனம் இது. ஜப்பான் நிறுவனங் களுடன் கொண்டிருக்கும் கூட்டுத் திட்டங்கள் இதன் வளர்ச்சியை அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனம், அதன் ஊசி தயாரிக்கும் பிரிவை தனியாகப் பிரித்துள்ளது. மருத்துவத் தயாரிப்பு நிறுவனங்களின் ஊசிப் பிரிவு, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் மத்தியில் அதிக மதிப்பைக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்த நிறுவனம், அதன் 92 லட்சம் பங்குகளைத் திரும்ப வாங்கி இருக்கிறது. அது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் (இபிஎஸ்) மேம்பட உதவும். இந்த நிறுவனப் பங்கின் விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து சுமார் 30% குறைந்து காணப்படுகிறது.

ஆந்திரா பேங்க் (Andhra Bank)

பொதுத்துறை வங்கிகளில் மிகவும் கவர்ச்சிகரமான பங்காக இருக்கிறது. 201314ல் இதன் மொத்த வாராக் கடன் 5.7 சதவிகிதமாக இருந்தது. இதை 4% அளவுக்குக் குறைக்க இருக்கிறது. இதன் மொத்த வருமானத்தில் சுமார் 52% ஆந்திர மாநிலத்திலிருந்து வருகிறது.

ஆந்திராவில் புதிய மாநிலம் தெலுங்கானா உருவாகியிருப்பது, இந்த வங்கியின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 201415ம் ஆண்டில் மட்டும் ஆந்திரா வங்கி புதிதாக 450 கிளைகளைத் திறக்க இருக்கிறது.

கரூர் வைஸ்யா பேங்க் (Karur Vysya Bank)

நல்ல சொத்து மதிப்பைக் கொண்டிருக்கும் இந்த வங்கியின் நிகர லாபம் 201314ல் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், கடந்த இரு ஆண்டுகளில் இதன் கிளைகளின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்ததே. இந்த காலகட்டத்தில் 121 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

201516ல் இந்த வங்கி அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இந்த வங்கி, ஆரம்பம் முதலே முதலீட்டாளர்களின் நண்பனாக இருந்து வருகிறது. போனஸ் பங்குகள், உரிமைப் பங்குகள், சிறப்பு டிவிடெண்ட்கள் வழங்கி முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது செய்யப்படும் முதலீடு அடுத்த மூன்றாண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஜென்ஸார் டெக்னாலஜீஸ் (Zensar Technologies)

கடன் இல்லாத, ரொக்க கையிருப்பு அதிகம் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனம். 201314ல் இந்த நிறுவனப் பங்கின் இபிஎஸ் ரூ.53. நிகர லாபம் ஆண்டுக்கு 10% அதிகரித்தால், தற்போதைய பங்கு விலையின் அடிப்படையில் இபிஎஸ் 30% வளர்ச்சி காணும். ஓராண்டில் இந்தப் பங்கின் விலை ரூ.576 ரூ.640க்கு அதிகரிக்கக் கூடும்.

மங்களூர் கெமிக்கல்ஸ் (Mangalore Chemicals)

இந்த நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் தீபெக் ஃபெர்டிலைசர்ஸ் 25%, ஜூவாரி 16.43% கொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் அவற்றின் பங்கு மூலதனத்தை மங்களூர் கெமிக்கல்ஸில் ஓப்பன் ஆஃபர் மூலம் அதிகரித்துக் கொள்ள செபியின் அனுமதியைப் பெற்றிருக்கின்றன.

மங்களூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த யூபி குழுமம் வசம் 22% பங்குகள் இருக்கின்றன. இந்த யூபி குழுமம், ஜூவாரியுடன் இணைந்து செயல்படும் என தெரிகிறது.

தீபெக் ஃபெர்டிலைசர், மங்களூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தைத் தனது கட்டுக்குள் கொண்டுவர இன்னும் 26% பங்கு மூலதனம் தேவை.

இதேபோல், ஜூவாரி யூபி குழுமத்துக்கு 12.57% பங்குகள் தேவை. இவை பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும்போது பங்கின் விலை கணிசமாக அதிகரிக்கும். அதாவது, அடுத்த ஆறு மாத காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை 25 40% அதிகரிக்கும் எனலாம்' என்றார்.

ஆக, உயரும் நம் இந்திய பொருளாதாரத்தின் பலனை நாமும் அறுவடை செய்ய இந்தப் பங்குகளில் அவசியம் முதலீடு செய்யலாம்!

குறிப்பு: பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி.நாகராஜன் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்தே.

நன்றி -ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum