Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


வீட்டு கடன் : அதிகரிக்கும், குறையும் மாதத் தவணை

View previous topic View next topic Go down

வீட்டு கடன் : அதிகரிக்கும், குறையும் மாதத் தவணை

Post by தருண் on Sat Jul 19, 2014 4:39 pm

பொதுவா, வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை கடைசிவரைக்கும் ஒரே அளவுக்கு இருக்குற மாதிரிதான் நிர்ணயிப்பாங்க. சில நிறுவனங்கள் இளம் வயதுக்காரர்களை மனசுல வச்சு, கடன் வாங்குன ஆரம்பத்துல கம்மியாவும், சம்பளம் கூடக்கூட அதிகமாவும் மாதத் தவணை கட்ட அனுமதிக்கும்.

இதேமாதிரி நடுத்தர வயசை நெருங்குறவங்க, ஆரம்பத்துல மாதத்தவணை அதிகமாவும், பிறகு குறைவாவும் கட்டுறதுக்கான வசதியும் இருக்கு.

கடனை எப்போது முதல் திரும்ப கட்ட வேண்டும்?

பெரும்பாலும் ஒரு வாடகை வீட்டுல குடியிருந்துகிட்டுதான் வீடு கட்ட ஆரம்பிப்பாங்க. அதனால, வீடு கட்டிக்கிட்டு இருக்குற காலத்துல அவ்வப்போது வாங்குகிற கடனுக்கான வட்டியை மட்டும் கட்டுனா போதும். பெரும்பாலான வங்கிகள்ல இந்த வசதி இருக்கு. கட்டுன வீட்டை / ஃப்ளாட்டை வாங்குனா, கடன் வாங்குன அடுத்த மாசத்துலேர்ந்து தவணையைக் கட்டணும்.

யாரெல்லாம் கடன் தருவார்கள்?

வீட்டுக் கடன் தர்றதுக்காகவே சில வீட்டு வசதி நிறுவனங்கள் இருக்கு. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இப்போ தாராளமா வீட்டுக் கடன் தர்றாங்க. இதுதவிர, வீட்டு வசதி வாரியம் கட்டுன வீடுகளையும் தவணையில வாங்கலாம். நிரந்தரமா ஒரு வேலையில இருக்குறவங்க (குறைந்தபட்சம் 5 ஆண்டு), தங்களோட பி.எஃப். கணக்குல சேர்ந்திருக்குற தொகையை வச்சு மனையோ, வீடோ வாங்கிக்கலாம்.

இந்த வகையில, உங்க கணக்குல உள்ள மொத்த தொகையில90% கடனா தருவாங்க. இந்தக் கடனை விரும்பினா திருப்பிக் கட்டலாம். இல்-லேன்னா, விட்டுடலாம். என்ன.. ரிட்டயர் ஆகும்போது கிடைக்கிற பணம் கம்மி-யாயிடும்.


வட்டி விகிதம்!

சில வங்கிகள், கடன் வாங்குபவர் என்ன வேலை பார்க்கிறார், அவருக்கு அவரோட ஆபீஸ்ல எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கு, ஏற்கெனவே வாங்கின கடன்களை சிக்கல் இல்லாம கட்டியிருக்காரா.. இதையெல்லாம் பார்த்துட்டு வட்டியை குறைச்சு நிர்ணயிக்குறாங்க. ஸ்டேட் பேங்க்குல ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வட்டியில 0.25% வரைக்கும் தள்ளுபடி தர்றாங்க. இன்னும் சில வங்கிகள்ல, மார்ஜின் மணி அதிகமா போடுறவங்களுக்கு 0.5-1% வட்டியை குறைக்கிறாங்க.

இது எதுவுமே வெளிப்படையா அறிவிச்சு நடக்கிறதில்லை. எல்லாம் 'கேளுங்கள் தரப்படும்' பாலிஸிதான். அதனால எந்த நிறுவனத்துல வீட்டுக்கடன் வாங்குனாலும் சரி.. கடனுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லி முடிஞ்ச அளவுக்கு பேரம் பேசுங்க.

-விகடன்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum