Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


இல்லத்தரசிகளுக்கும் காத்திருக்கின்றன... இணையற்ற படிப்புகள்!

View previous topic View next topic Go down

இல்லத்தரசிகளுக்கும் காத்திருக்கின்றன... இணையற்ற படிப்புகள்!

Post by தருண் on Tue Jun 03, 2014 4:14 pm

தொழில்சார்ந்த சான்றிதழ் படிப்புகள், எந்த வயதிலும் படிக்கக் கூடியவை. குறுகியகால படிப்புகளான இவற்றுக்கு தினமும் இரண்டு மணி நேரம் செலவழித்தாலே போதும்... வீட்டிலிருந்தபடியே வருமானத்தை அள்ளலாம். அத்தகைய தொழில்களுக்கான பயிற்சி வகுப்புகள் சிலவற்றைப் பற்றி இங்கு பட்டியலிடுகிறார் சென்னையிலிருக்கும் 'தமிழ்நாடு அட்வான்ஸ்டு டெக்னிகல் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்' நிர்வாகி சுந்தரேசன்.

ஜுவல்லரி டிசைன் மேக்கிங்:

ஒரு நகையை செய்வதற்கு முன், அதற்கான டிசைனை கற்பனை செய்து, பேப்பரில் வரைந்து, கம்ப்யூட்டரில் 'கேட்’ (CAD) சாஃப்ட்வேர் உதவியோடு டிசைனை உருவாக்குவதற்கு இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படும். பயிற்சி முடித்தபின், கற்பனைத் திறனில் உருவாக்கும் புதுப்புது டிசைன்களுக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும். ஒரு டிசைனுக்கு 600 - 1,500 ரூபாய் வரைகூட பெறலாம். இது, டிசைனைப் பொறுத்து அதிகரிக்கவும் செய்யும். நகை செய்யும் தொழிற்சாலைகள், நகைக் கடைகள் போன்றவற்றில் இதற்கான வேலைவாய்ப்பைப் பெறலாம். திறமையை நிரூபித்தால், வீட்டிலிருந்தபடியே நகை டிசைன் செய்து, நிறுவனங்களுக்கு அனுப்பலாம். பயிற்சிக்காலம், 45 நாட்கள்.

டி.டி.பி (DTP) டிசைனிங்:

ஓரளவுக்கு வரைவதில் ஆர்வமும், கலரிங் சென்ஸும் இருப்பவர்களுக்கு ஏற்ற துறை இது. பயிற்சியில் கோரல் ட்ரா, போட்டோ ஷாப் போன்ற டிசைனிங் சாஃப்ட்வேர்கள் கற்றுக்கொடுக்கப்படும். விசிட்டிங் கார்டு டிசைனிங், இன்விடேஷன் டிசைனிங் உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே செய்யலாம். இன்னும் விளம்பர டிசைனிங், டிஜிட்டல் விளம்பரப் பலகை டிசைனிங், சுவரொட்டிகள் டிசைனிங், அட்டைப்படம் முதல் அனைத்துப் பக்கங்களுக்கும் லேஅவுட் டிசைனிங் என்று விரிகின்றன வேலை வாய்ப்புகள். பயிற்சிக் காலம், மூன்று மாதங்கள்.

வெப் டிசைனிங்:

இது, கிட்டத்தட்ட டி.டி.பி போலதான். டி.டி.பி வேலைகளில் ஒன்றான புத்தக லேஅவுட் போல, இது
வலைதளங்களுக்கான லேஅவுட். ஒவ்வொரு பேஜ் டிசைனிங்குக்கும், அதன் தரத்தைப் பொறுத்து விலை முடிவு செய்யப்படும். தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என வலைதளப் பயன்பாடும் அவசியமும் பெருகிவிட்ட இக்காலத்தில், வரவேற்புள்ள துறை இது. பயிற்சிக் காலம், மூன்று மாதங்கள்.

கன்டன்ட் ரைட்டர்:

மொழிப்புலமை உள்ளவர்களுக்கு, வலைதளங்களில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு வரி விஷயத்தை விலாவாரியாக ஒரு பக்கத்துக்கு விளக்கி எழுதுவது முதல், அனைத்து வகையிலும் எழுத்துத் திறனில் மெருகேற்றும் இப்பயிற்சி. நிறுவனங்களின் வலைதளங்களுக்கு 'கன்டன்ட்’ எழுதியே நிறைய சம்பாதிக்கலாம். பயிற்சிக் காலம், மூன்று மாதங்கள்.

பெண்களுக்கு மீடியா சம்பந்தப்பட்ட பணி வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைப் பட்டியலிடுகிறார் நங்கநல்லூர், 'பிரசன்டர்ஸ் இன்ஸ்டிடியூட்' நிர்வாகி ஜான் லோப்பஸ்.

வாய்ஸ் டப்பிங்:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாலியாகப் படிக்கக் கூடிய கோர்ஸ் இது. மொழிமாற்ற சினிமாக்கள் மற்றும் டி.வி சீரியல்கள், குழந்தைகளுக்கான தமிழ் கார்ட்டூன் சேனல்களில் வரும் நிகழ்ச்சிகள், இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்படும் விளம்பரங்கள், வானொலி விளம்பரங்கள் என எல்லா திசையிலும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்களுக்கான தேவை அதி கம் இருக்கிறது. தனியார் அலுவலக மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும் வெப்சைட்களுக்கு குரல் கொடுப்பது, நல்ல தோற்றமும், திறமையும் ஒருசேர இருப்பின் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் 'விஜே’ வாய்ப்பு, குரல்வளத்துடன், பொது அறிவும், நேரத்துக்கு ஏற்றாற்போல் பேசும் திறனும் இருந்தால் 'ஆர்ஜே’ வாய்ப்பு என்று சிவப்புக் கம்பளம்தான். பயிற்சிக் காலம், 25 நாட்கள், தினமும் 3 மணி நேரம்.

நியூஸ் ரீடர்:

புதுப்புது செய்தி சேனல்களின் வரவால், செய்தி வாசிப்பாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் வானொலி மற்றும் செய்தி வலைதளங்களிலும் செய்திவாசிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வார்த்தை உச்சரிப்பு, மூச்சுப் பயிற்சி, ஸ்டுடியோவில் நடந்துகொள்ளும் முறை என பல விஷயங்களையும் கற்றுத் தரும் இந்த கோர்ஸின் பயிற்சிக் காலம், 30 நாட்கள். தினமும் 3 மணி நேரம்.

என்ன கிளம்பிட்டீங்களா... இல்லத்தரசிகளே!

முக நூல்
ந.விகடன்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum