Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Go down

லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Post by தருண் on Thu Jul 20, 2017 9:28 am

அன்றாட விஷயங்களில் பெரும்பாலானவை டிஜிட்டலுக்கு மாறிவிட்ட நிலையில் வேலைகளை விரைவாகவும், சரியாகவும் செய்து முடிக்க உதவும் கேட்ஜெட்களில் முதலிடத்தில் இருப்பது லேப்டாப் என்று சொல்லப்படுகிற மடிக்கணினிதான். எங்கும் எடுத்துச்செல்ல எளிதானவை என வணிகம் சார்ந்த பயன்பாடுகளில் மடிக்கணினிகளின் தேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

புதிதாக மடிக்கணினிகள் வாங்க நினைப்பவர் களுக்கு அதில் கொட்டிக்கிடக்கும் வசதிகளே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். நமக்கு எது தேவை என்று அறிந்துகொண்டால் சரியான விலையில் நிறைவான வசதிகளுடன் கூடிய மடிக்கணினியை வாங்கலாம். மடிக்கணினி வாங்க நினைப்பவர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகச் சில ஆலோசனைகள்...



திரையின் அளவு

ஒரு மடிக்கணினியின் விலையை பெரும்பாலும் அதன் திரையின் அளவே தீர்மானிக்கிறது. தற்போது சந்தையில் 15.6 இன்ச் அளவு திரை அளவுகொண்ட மடிக்கணினிகள் அதிகம் கிடைக்கின்றன. அவை தொழில் சார்ந்த பயன்பாட்டுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும். அடிக்கடி பயணம் செய்பவர்கள் எடுத்துச் செல்ல எளிதாக 12-14 இன்ச் அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.

திரையின் வகை

தொடுதிரை வசதி அடுத்த தலைமுறை மடிக்கணினிகளில் புதிய வரவு. உங்களுக்கு கீபோர்டு மூலம் இயக்குவதற்குச் சலிப்பு ஏற்பட்டால், திரையைத் தொடுவதன் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால், இந்த வகை மடிக்கணினிகள் பயன்படுத்த எளிதாக இருந்தாலும், விலை சற்று அதிகம்தான்.

தவிர, தொடுதிரை வசதியைப் பயன்படுத்துவது குறைவு என்பதால் சாதாரண வகை திரை உள்ள மடிக்கணினியையே தேர்வு செய்யலாம். அது சற்று விலை குறைவாகவும் கிடைக்கும். நீண்டகாலமும் உழைக்கும்.

எடை

மடிக்கணினிகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் அதன் எடை. எடை குறைவான மடிக்கணினிகளே பயன்படுத்தவும், பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் வசதியானவை. தற்போது எடை குறைந்த பொருள்கள் பயன்படுத்தப்படுவதால், மடிக்கணினிகள் 2.5 கிலோவுக்கும் குறைவாகவே இருக்கின்றன. இது, எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய எடைதான். அதற்கும் குறைவாக வேண்டுமென்றால் விலை அதிகமாக இருக்கும்.

போர்டுகளின் வகை மற்றும் எண்ணிக்கை

தகவல்களை இன்புட் செய்யவும், அவுட்புட் செய்யவும் அவசியமானவை போர்டுகள். எல்லா மடிக்கணினிகளிலும் குறைந்தபட்சமாக மூன்று யூஎஸ்பி (USB) போர்டுகள் இருப்பது நல்லது. யூஎஸ்பி 3.0 வசதி உள்ள போர்டுகளைத் தேர்ந்தெடுத்தால், அதன்மூலம் வேகமாக டேட்டா பரிமாற்றம் செய்யலாம். இணைய வசதியை அளிக்க ஈதர்நெட் போர்டு அவசியம். மேலும், HDMI, VGA போன்ற வசதிகள் தேவையிருந்தால் மட்டும் அவை இருக்கும் மடிக்கணினிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

நினைவகத் திறன்

நினைவகத் திறனைப் பொறுத்தவரை, 1 டிபி (TB) ஹார்ட் டிஸ்க் இருக்குமாறு வாங்குவது நல்லது. இதனால் அதிகமான தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும். இது, மடிக் கணினியின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், தனியே ஹார்ட் டிஸ்க் வாங்கும் செலவையும் குறைக்கும்.

பேட்டரி திறன் மற்றும் ரேம்

மடிக்கணினியின் குறைந்த பட்ச பேட்டரி திறன் 6 மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பிராசஸர் மற்றும் ரேம் ஆகியவற்றைப் பொறுத்தே மடிக்கணினியின் வேகம் அமையும். குறைந்த பட்சமாக 4 ஜி.பி ரேம் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயங்குதளம்

இயங்குதளம் என்றாலே பலரும் அறிந்தது விண்டோஸ்தான். ஆனால், யாருமே அறியாத விஷயம் நாம் அதற்காக கணிசமான தொகையை அளிக்கிறோம் என்பது. ஆம், புதிய விண்டோஸ் இயங்குதளத்தின் விலை பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகம். எனவே, விருப்பம் இருந்தால் ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்தலாம். இதனால் மடிக்கணினி வாங்கும் விலையைப் பெருமளவு குறைக்கலாம்.

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. அதுவும் இலவசமாக. அதோடு வைரஸ் தாக்குதலும் ஓப்பன் சோர்ஸில் குறைவு.

இனி, மடிக்கணினி வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களை மனதில்கொண்டு செயல்படலாமே!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum