Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?

View previous topic View next topic Go down

மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?

Post by தருண் on Fri Jan 13, 2017 10:05 am



மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதுப்புது வசதிகள் தொடர்ந்து அறிமுகம் ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வந்திருக்கிறது டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான். இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

* டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் தொகையை வேறு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கு  மாற்றுவதற்கான எளிய வழிமுறைதான் இந்த டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான். பெயரில் குறிப்பிட்டுள்ளதைப்போல், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் பணத்தை, வேறு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கு இந்தத் திட்டத்தின் மூலம் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.

* எப்படிச் செயல்படுகிறது?

முதலீட்டாளர்கள் நிர்ணயித்த தொகை அல்லது அதைவிட அதிக டிவிடெண்ட் தரப்படும் பட்சத்தில், அந்தத் தொகை, ஏற்கெனவே குறிப்பிட் டிருக்கும் வேறு ஒரு திட்டத்துக்கு மாற்றப்படும். இதில் டிவிடெண்ட், நிர்ணயிக்கப் பட்ட குறைந்தபட்ச அளவைவிட குறைவாக இருந்தால், அதே திட்டத்தில் மறு முதலீடு செய்யப்படும்.

சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளானில் (எஸ்டிபி), மாற்ற வேண்டிய தொகையை நீங்கள் நிர்ணயிப்பீர்கள்; ஆனால், இங்கே எவ்வளவு தொகை   டிவிடெண்டாகக் கிடைக்கும் என்ற தகவல் உங்களுக்குத் தெரியாது. எப்போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக டிவிடெண்ட் தரப்படுகிறதோ, அப்போதெல்லாம் தொகை மாற்றப்படும்.

* ஏன் டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான்?  

தங்களது முதலீட்டை ரிஸ்க் குறைவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் முறை மிகவும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக, குறைந்த ரிஸ்க்கை மட்டுமே எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும். அவர்கள் தங்களுடைய முதலீட்டைக் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்;  டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் தொகையை ஈக்விட்டித் திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum