Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் 6 அம்சங்கள்..!

View previous topic View next topic Go down

கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் 6 அம்சங்கள்..!

Post by தருண் on Thu Nov 17, 2016 10:36 am

நம்மை அறியாமல் நாம் செய்யும் பல விஷயங்கள், நமது கடன் வாங்கும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடும். இந்தக் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், நமக்கு எளிதாகக் கடன் கிடைக்க உதவும்.



1. கடனுக்கான மாதத் தவணை கட்டத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால், கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதி நமக்கு இல்லை என சிபில் அறிக்கையில் பதிவாகும் என்பது பலருக்கும் தெரியாது.

2. கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு, அதனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறையும். காரணம், ஒருவர் தனக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதி இல்லை என்பதால்தான், கிரெடிட் கார்டு மூலம் எந்தப் பொருளையும் வாங்கவில்லை என கடன் தரும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யும்.

3. அதேபோல், அதிக அளவில் கிரெடிட் கார்டினை பயன்படுத்தினாலும், ஜாமீன் இல்லாமல் தரப்படும் பர்சனல் கடன்களை அதிகம் வாங்கினாலும் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் குறையும். காரணம், இதுமாதிரியான கடன்கள் ஒருவரை பெரும் செலவாளி போலக் காட்டிவிடும்.

4. கிரெடிட் கார்டு கடன் அல்லது பர்சனல் கடன் வாங்கிவிட்டு, அதனை முழுமையாகச் செலுத்தாமல், வட்டி அல்லது அசல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் ஒருவரது கடன் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

5. பலமுறை கடன் வாங்கினால்தான் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் குறையும் என்றில்லை. கடனுக்காக பல்வேறு கிரெடிட் கார்டுகள், பான் நம்பர் கொடுத்து விசாரித்திருந்தாலும் ஒருவரது கடன் ஸ்கோர் குறையும். காரணம், அதிகம் கடன் வாங்குபவர்கள் அதிக ரிஸ்க் கொண்டவராகக் கருதப் படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

6. கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கிவிட்டு, அதனைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் (35 முதல் 40 நாள்கள்) கட்ட முடியாமல் கடன் தொகையை மாதத் தவணையாக மாற்றிக் கொண்டாலும் ஒருவரது கடன் புள்ளிகள் குறையும். அதாவது, ஒருவரது கடன் திரும்பச் செலுத்தும் திறன் குறைவாக இருப்பதாக கடன் வழங்கும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்வதுதான்.
ந.விகடன்

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum