Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!

View previous topic View next topic Go down

முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!

Post by தருண் on Wed Oct 05, 2016 3:33 pm

முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.




மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பங்கு சார்ந்தவை (ஈக்விட்டி) மற்றும் கடன் சார்ந்தவை (டெப்ட்) என இருவகையாக பிரிக்கலாம். இந்த இரண்டில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை டைவர்சிஃபைடு மற்றும் செக்டோரல் எனப் பிரிக்கலாம். டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்துத் துறை சார்ந்த பங்குகளிலும் முதலீடு செய்யும். ஆனால், செக்டோரல் ஃபண்டுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே முதலீடு செய்யும்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் உலகில், டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில்தான் முதலீடு அதிகமாக உள்ளது. உலகெங்கிலும் இதுவே உண்மை. ஏனென்றால் டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகள் அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால், செக்டோரல் ஃபண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்தத் துறையும் நன்றாகச் செயல்பட வேண்டும். அவ்வாறு ஒரு துறை விழுந்தால் அது மேலெழுந்து வருவதற்கு பல வருடங்கள் ஆகலாம். இதற்கு  நேரெதிராக அத்துறை மேலெழுந்து வரும்போது, மிக விரைவாக வந்துவிடும்; நல்ல வருமானத்தையும் தரும். ஆகவே துறை சார்ந்த முதலீடுகள் ஹை ரிஸ்க் – ஹை ரிவார்டு கேட்டகிரியைச் சார்ந்தவை.  

ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு காலகட்டத்தில் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. உதாரணத்துக்கு, சில வருடங்கள் முன்பு நமது ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தபோது டெக்னாலஜி (ஐ.டி) ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்தன. அதேபோல் 2008 உச்சத்துக்குப் பிறகு, எஃப்எம்சிஜி மற்றும் ஃபார்மா ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்தன. கடந்த சில வருடங்களில் டிரான்ஸ்போர்ட்டேஷன் ஃபண்ட் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆறு மாதத்தில் பேங்கிங் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளன. தற்போது பார்மா ஃபண்டுகள் சற்று மந்தமாக உள்ளன. அதேபோல், இன்ஃப்ரா, எனர்ஜி போன்ற துறை சார்ந்த ஃபண்டுகளில் கடந்த காலங்களில் முதலீடு செய்து பெரிய வருமானம் இல்லாமல் நஷ்டமடைந்தவர்களும் உண்டு. ஆகவே, துறை சார்ந்த முதலீடுகளில் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் சரியான தருணங்களாக இருக்க வேண்டும்.

துறை சார்ந்த ஃபண்டுகளில் பல வகைகள் இருந்தாலும், அதிக சொத்துக்கள் நிர்வாகத்தில் இருக்கும் துறைகள் இன்ஃப்ரா, பேங்கிங் மற்றும் பார்மா ஃபண்டுகளே. முதன்முறை முதலீட்டாளர் செக்டோரல் ஃபண்டுகளில் நுழையாமல் இருப்பது நன்று. பல ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அனுபவமுள்ளவர் கள், தங்களது போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியை (10 சதவிகிதம் வரைக்கும்) செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, எதிர்பார்த்த அளவுக்கு அத்துறை மேலெழுந்து வந்தால் அந்த முதலீட்டை அறுவடை செய்யவும் தயங்கக்கூடாது. எஸ்ஐபி முறை முதலீட்டைவிட, மொத்த முதலீடே இவ்வகை ஃபண்டுகளில் சிறந்தது.

துறை சார்ந்த ஃபண்டுகளை நாம் ஒரு குறிக்கோளை அடைவதற்காகப் பயன்படுத்த முடியாது. உங்களின் மொத்த போர்ட்ஃபோலியோ வருமானத்தை சற்று அதிகரிக்க இவ்வகை ஃபண்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்றைய நிலையில் எந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மேலெழுந்து வரும்போது வங்கி மற்றும் நிதி சேவைத் துறையும், இன்ஃப்ரா துறையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இத்துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள், தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.  

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சில ஃபண்டுகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஐசிஐசிஐ புரூ பேங்கிங் & ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் ஃபண்ட்!

இந்த ஃபண்ட் வங்கி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைத் துறைகளில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது.
நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1,124 கோடி ரூபாய் ஆகும். ஹெச்டிஎஃப்சி பேங்க் இதன் போர்ட்ஃபோலியோவில் 15.08% அளவில் டாப் ஹோல்டிங்காக உள்ளது. 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்ஏவி ரூ.45.72 ஆகும். இதன் ஃபண்ட் மேனேஜர் வினய் ஷர்மா ஆவார்.

ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்ட்!

இருக்கும் பேங்கிங் ஃபண்டுகளில் இதுதான் மிகப் பெரியது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ .2,342 கோடியாகும். 2003-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்.ஏ.வி ரூ.203.06 ஆகும். இதன் போர்ட்ஃபோலியோவில் ஹெச்டிஎஃப்சி பேங்க் 29.13 சதவிகிதமும், ஐசிஐசிஐ பேங்க் 14.13 சதவிகிதமும் உள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சஞ்சை பரேக் மற்றும் ஷ்ரே லூங்கர் ஆவார்கள்.




ஃப்ராங்க்ளின் பில்ட் இந்தியா ஃபண்ட்!

இந்த ஃபண்ட் ரூ.678 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. 2009-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்.ஏ.வி ரூ.32.84 ஆகும். ஃபைனான்ஸ் துறை இதன் டாப் ஹோல்டிங்ஸாக (40.10%) உள்ளது. இன்ஃப்ரா துறைக்கு இந்த ஃபண்ட் எடுத்துக் கொண்டுள்ள விளக்கம் சற்று வித்தியாசமானது. ஆகவே, இந்த ஃபண்ட் ஒரு டைவர்சிஃபைடு ஃபண்ட் போல உள்ளது. ஃபார்மா, எஃப்.எம்.சி.ஜி போன்ற துறைகள் இந்த ஃபண்டில் இடம் பெறவில்லை. இந்த ஃபண்டின் மேனேஜர்கள் ஆனந்த் ராதாகிருஷ்ணன், ரோஷி ஜெயின் மற்றும் ஸ்ரீகேஷ் நாயர் ஆவார்கள்.

எல் அண்ட் டி இன்ப்ஃராஸ்ட்ரக்சர் ஃபண்ட்!

தனது பெயருக்கேற்ப வெறும் இன்ஃப்ரா துறையில் மட்டும் தனது முதலீட்டை மேற்கொண்டுள்ளது. ஃபைனான்ஸ், பார்மா, எஃப்எம்சிஜி போன்ற துறைகளில் தனது முதலீட்டை மேற்கொள்ளவில்லை. கன்ஸ்ட்ரக்‌ஷன், இன்ஜினீயரிங், மெட்டல், எனர்ஜி, சர்வீசஸ் போன்ற துறைகளில் தனது முதலீட்டை அதிகமாக வைத்துள்ளது. இது தற்போது ரூ.247 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. 2007-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் தற்போதைய என்ஏவி ரூ.12.18 ஆகும். தவறான நேரத்தில் துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால், என்ன நஷ்டம் என்பது இதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும். இதன் ஃபண்ட் மேனேஜர் சௌமேந்திரநாத் லஹிரி ஆவார்.

கோட்டக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் எக்கனாமிக் ரீஃபார்ம் ஃபண்ட்!

தற்போது ரூ.167 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இந்த ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டின் என்ஏவி ரூ.17.34 ஆகும். இந்த ஃபண்டும் எல் அண்ட் டி-யைப் போல ஒரு இன்ப்ஃரா ஃபண்ட் எனக் கூறலாம். இதன் பெரும்பகுதி ஹோல்டிங்ஸ் இன்ஜினீயரிங், கன்ஸ்ட்ரக் ஷன், மற்றும் எனர்ஜி நிறுவனப் பங்குகளில் உள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஹரீஷ் கிருஷ்ணன் ஆவார்.

இதுபோன்ற நல்ல ஃபண்டுகளை அடையாளம் கண்டு, சரியான தருணங்களில் முதலீடு செய்து பயன் பெறலாம்.


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum