Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கன்ஸ்யூமர் லோன்... உங்களுக்கு கிடைக்குமா?

View previous topic View next topic Go down

கன்ஸ்யூமர் லோன்... உங்களுக்கு கிடைக்குமா?

Post by தருண் on Wed Oct 05, 2016 3:02 pm

பண்டிகை என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம். நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க முடிவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.

இந்த கடன் எப்படி வழங்கப்படுகின்றன, இதற்கு என்ன ஆவணங்கள் தேவை, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விசாரிக்க களமிறங்கினோம். ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகளில் இருக்கும் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

ஆவணங்கள்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பவர்கள் தங்களுடைய முகவரிச் சான்று, அடையாளச் சான்று, கடைசி 3 மாத வங்கி அறிக்கை, காசோலை ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பம் செய்பவரின் முகவரி எல்லா ஆவணங்களிலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் முகவரி மாறி இருந்தால் கடன் மறுக்கப்படலாம்.

கடன் வாங்கப் போகிறவர், எந்த வீட்டில் குடி இருக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியைத்தான் முகவரிச் சான்றாக தரவேண்டும். ஒரு மாதத்துக்குமுன் வேறு ஒரு இடத்தில் வசித்துவிட்டு, கடன் வாங்கும்போது பழைய வீட்டின் முகவரியைத் தரக்கூடாது. கடைசியாக எந்த வீட்டில் வசிக்கிறாரோ, அந்த வீட்டின் முகவரியையே முகவரிச் சான்றாக வழங்க வேண்டும்.



சிபில் ஸ்கோர்!

நுகர்வோர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் அனைத்தும் ஒரிஜினலாக இருக்க வேண்டும். ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வழங்கினாலும் ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான் இந்தக் கடன் வழங்கப்படும். ஆவணங்கள் சரியாக இருந்தாலும் அவருடைய சிபில் ஸ்கோரைப் பொறுத்தே கடன் வழங்கப்படும் என்பதால் கடன் பெற விண்ணப்பிக்கிறவரின் சிபில் ஸ்கோர் அதிகமாக இருப்பது அவசியம்.

கடன் தொகை!

ஒருவர் ரூ.30,000 மதிப்புள்ள டிவியை வாங்குகிறார் எனில், அதில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது 10,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். மீதி 20,000 ரூபாயை எட்டு மாதத் தவணையில் திரும்பக் கட்டலாம். இதுவே விலை உயர்ந்த பொருட்கள் எனில், உதாரணமாக ரூ.5 லட்சம் மதிப்புடைய பொருட்களை வாங்கும்போது அதற்கு 18 மாதத் தவணையாக எடுத்துக்கொண்டு, அதில் முதல் நான்கு மாத தவணையைக் கடன் வாங்குபவர் முதலில் செலுத்த வேண்டியிருக்கும். மீதியுள்ள தொகையை மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் கடனுக்கு குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம் ரூ.500-ஆக உள்ளது. இது பொருட்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும். உதாரணத்துக்கு, ரூ.20,000 மதிப்புடைய டிவி வாங்கினால், 2% பரிசீலனைக் கட்டணம் ரூ.400-ஆக இருந்தாலும் ரூ.500 வசூலிக்கப்படும். இதுவே வாங்கும் பொருளின் மதிப்பு ரூ.2,00,000 எனில், பரிசீலனைக் கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படும். இது பிராண்டுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

எவ்வளவு கடன்?

மாதச் சம்பளதாரர்களின் சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்பட்டால் மட்டுமே கடன் கிடைக்கும். குறைந்தபட்சம் மாதச் சம்பளம் 10,000 ரூபாய் இருந்தால்தான் கடன் கிடைக்கும். ரூ.2 லட்சம் நுகர்வோர் கடன் வாங்கவேண்டும் எனில், அவருக்கு மாதச் சம்பளம் குறைந்தது ரூ.30,000-ஆக இருக்க வேண்டும். நுகர்வோர் ரூ.10,000 சம்பளம் பெறுகிறார் எனில், அவருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே கன்ஸ்யூமர் லோன் வழங்கப்படும். இதுவே ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளம் பெறுகிறார் எனில் அவருக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நுகர்வோர் கடன் வேண்டும் எனில் அவர்களுடைய வங்கிப் பரிவர்த்தனையைப் பொறுத்தே கடன் வழங்கப்படுகிறது. வங்கிப் பரிவர்த்தனை மாதம் குறைந்தது ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை நடைபெற்று இருக்க வேண்டும்.

நுகர்வோர் ஒரே வங்கிக் கணக்கை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்; பான் கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளார். அவர் பெயரில் எந்தவொரு செக் பவுன்ஸ் புகாரும் கிடையாது எனில் அவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை நுகர்வோர் கடன் கிடைக்கக்கூடும். வருமானம் குறித்த ஆவணங்களை வைத்தே இந்தக் கடன் தீர்மானிக்கப்படுவதால், அந்த ஆவணங்களைச் சரியாக வைத்திருப்பது அவசியம்.



தவணை உஷார்!

நுகர்வோர் கடன் கிடைத்தபிறகு ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை நிறுவனங்கள் தெரியப்படுத்தும். அந்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்லது. கெடு தேதிக்குப் பிறகு செலுத்தினால் 500 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும். மேலும், உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையவும் அது காரணமாக அமையும். அடுத்த முறை கடன் வாங்கும்போதும் சிரமங்கள் ஏற்படும். கடனை திருப்பிச் செலுத்த தவறினால், மூன்று மாதங்களுக்குப் பின் வாங்கிய பொருளை கடன் வழங்கிய நிறுவனம் எடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

நுகர்வோர் கடன் வாங்குவதற்கு முன்னரே வேறு ஏதாவது கடன் வங்கிகளில் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல்தான் கடன் வழங்கப்படும்.

நுகர்வோரைக் கவரும் வகையில் பண்டிகைக் காலங்களில் பரிசீலனைக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகையால் பொருட்களை வாங்கும்போது இதுகுறித்து விசாரித்து வாங்குவதே நல்லது.

வட்டி விகிதம்!

நுகர்வோர் கடன்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் கேட்டோம். ‘‘சில நிதி நிறுவனங்கள்தான் ஜீரோ இன்ட்ரஸ்ட் கடன் வழங்கி வருகின்றன. வங்கிகளால் இப்படிக் கடன் வழங்க முடியாது. வங்கியில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் தனிநபர் கடன் வாங்கி, அதில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து வட்டி 12% முதல் 20% வரை இருக்கும்” என்றார்.

பண்டிகை நாட்களில் புதிய பொருட்களை குறைந்த விலையில் கடனில் வாங்க முடியும் என்றாலும் மேலே கூறப்பட்ட விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.

கன்ஸ்யூமர் லோன் வாங்கப் போகும் முன் டாக்குமென்டுகள் உள்பட எல்லா விஷயங்களையும் சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே உங்களுக்குக் கடன் மறுக்கப்படாமல் கிடைக்க வாய்ப்புண்டு.


ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum