Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கோல்டு இடிஃப் டு கோல்டு பாண்ட்: முதலீடுகள் மாற என்ன காரணம்?

View previous topic View next topic Go down

கோல்டு இடிஃப் டு கோல்டு பாண்ட்: முதலீடுகள் மாற என்ன காரணம்?

Post by தருண் on Mon Aug 29, 2016 2:28 pm



காகிதத் தங்கம் என்கிற கோல்டு இடிஎஃப், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் அறிமுகமான பிறகு, ஆபரணமாக தங்கத்தை வாங்க விரும்பாதவர்களின் விருப்பமான முதலீடாக மாறியது.

இந்த கோல்டு இடிஎஃப் யூனிட்டுகளை வாங்குவதும், விற்பதும் எளிது; செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகள் எதுவும் இல்லாமல் இருப்பது போன்ற பாசிட்டிவ் அம்சங் களால் கோல்டு இடிஎஃப்-ல் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கோல்டு இடிஃப் முதலீடு செய்யவோ அல்லது வர்த்தகம் செய்யவோ டீமேட் கணக்கு அவசியம். இதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.400 செலவாகும்.

இடிஃப் என்பது, தங்கத்தின் விலை அதிகரிப்பை நேரடியாகப் பிரதிபலிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் இதை மிகவும் விரும்பினார்கள்.

இப்படி பல நல்ல அம்சங்கள் இருந்தும், சமீப காலமாக கோல்டு இடிஎஃப்-ல் இருந்து முதலீடுகள் கணிசமாக வெளியேறின. நடப்பு 2016-17-ம் நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், அதாவது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் முறையே ரூ.69, ரூ.79, ரூ.80 மற்றும் ரூ.183 கோடி என்ற அளவுக்கு கோல்டு இடிஎஃப் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, முதலீடு வெளியேறி இருக்கிறது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. கோல்டு இடிஎஃப் ஃபண்டுகள் கடந்த ஓராண்டில் (2015 ஆகஸ்ட் - 2016 ஆகஸ்ட்) ஏறக்குறைய 22% லாபம் தந்துள்ளன.

2. மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள கோல்டு பாண்டுகள். இதுபற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தங்க இறக்குமதியைக் குறைக்க சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் தங்க சேமிப்புப் பத்திரமும் ஒன்றாகும். தங்க சேமிப்புப் பத்திரங்களை மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்த போது பலரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இதை முதலீட்டாளர்கள் விரும்பும் வகையில் சில திருத்தங்களை இப்போது செய்துள்ளது மத்திய அரசாங்கம்.

இதுவரை நான்கு முறை இந்த தங்கப் பத்திரங்களை வெளியிட்டதில், மத்திய அரசுக்கு ரூ.2,292 கோடி கிடைத்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை முதன் முறையாக அறிமுகம் செய்தபோது 62,169 பேர் விண்ணப்பித்தனர். சென்ற ஜூலை மாதத்தில் நான்காம் முறை தங்கப் பத்திர விற்பனை நடந்தபோது 1.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த காலகட்டத்தில்தான் கோல்டு இடிஎஃப் முதலீடுகள் வெளியேறியுள்ளன.

கோல்டு பாண்டுகளில் மத்திய அரசாங்கம் செய்த சில முக்கிய மாற்றங்கள்...

* குறைந்தபட்ச முதலீடு 2 கிராம் என்று இருந்ததை 1 கிராமாகக் குறைத்தது.

* தனி நபருக்கு 8 வருட முதிர்வின்போது கிடைக்கும் ஆதாயத்தில், இதுவரை இருந்து வந்த வரி விதிப்பு விலக்கப் பட்டுள்ளது.

* வங்கிகள் மட்டுமில்லாமல், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ப ரேஷன் மற்றும் குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் விநியோ கிக்க முயற்சி எடுக்கப்பட்டி ருக்கிறது.

இந்த கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவையில்லை என்பது முக்கியமான விஷயம். மேலும், முதலீட்டை இடையில் திரும்பப் பெறவேண்டுமானால், நீண்ட கால ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற அல்லது வரியைக் குறைக்க விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் நிவர்த்தி பெற முடியும்.



முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள் என்றாலும், குறைந்த பட்சம் ஐந்து வருடத்துக்குப் பிறகு நீங்கள் விரும்பினால் முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

நீண்ட காலம் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மட்டும், தங்க முதலீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வது பலனளிக்கும். முதிர்வின்போது, அன்றைய தேதியில், ஆபரணமாகவோ, தங்க காசுகளாகவோ தர மாட்டார்கள். ரூபாயாக வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள். இதனைக் கொண்டு நாம் தங்கம் வாங்கிக்கொள்ளலாம்.

கோல்டு பாண்டில் முதலீடு செய்தபின், முதிர்வுக் காலமான எட்டு வருடம் கழித்து, தங்கத்தின் விலை குறைந்திருந்தால், நம் முதலீட்டின் மதிப்பும் குறைந்தே இருக்கும். அதேசமயம், ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்திருக்கும் என்பதால் நமக்கு எந்த நஷ்டமும் வராது.

இப்போதே தங்கத்தை ஆபரணமாக வாங்கினாலும், எட்டு வருடம் கழித்து அதன் மதிப்பு, அப்போதைய சந்தை மதிப்புக்கு இணையாகத்தான் இருக்கும். ஆனால், பழைய நகையை விற்கும்போது சேதாரம் என்கிற பெயரில் விலையைக் குறைத்துத் தர வாய்ப்பு உண்டு. எனவே, இதில் முதலீடு செய்வதால், யாருக்கும் நஷ்டம் ஏதும் வர வாய்ப்பில்லை.

என்றாலும், தங்கத் தேவை இருப்பவர்கள் மட்டுமே கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்யலாம். காரணம், நீண்ட காலத்தில் இதைவிட அதிக லாபம் தரக்கூடிய பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் (பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்) இருப்பதை நாம் மறக்கக் கூடாது!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum