Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!

View previous topic View next topic Go down

அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!

Post by தருண் on Mon Jul 04, 2016 3:15 pm

அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!
அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.



நாம் அனைவரும் மியூச்சுவல் ஃபண்டுகளை குறித்து வெவ்வேறு புள்ளிவிபரங்களை வைத்து தேர்வு செய்கிறோம். ஃபண்ட் நிறுவனத்தின் பெயர், ஃபண்ட் மேனேஜரின் திறன் மற்றும் அனுபவம், கடந்த கால வருமானம், ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு என பல பரிமாணங்களில் ஒரு ஃபண்டினைப் பற்றி ஆராய்ந்து முதலீடு செய்கிறோம். இந்த புள்ளிவிபரங்களில் முக்கியமான ஒன்றுதான், ஆல்பா (Alpha - A) எனப்படும் அளவுகோல்.

இந்தியாவில் பெரும்பாலான ஃபண்டுகள் ஆக்டிவ்வாகச் செயல்படும் ஃபண்டுகள்தான். இவ்வகை ஃபண்டுகளால்தான் குறியீட்டினைவிட அதிகமான வருமானத்தை ஈட்டித் தரமுடியும். குறியீட்டினைவிட அதிகமாகக் கொடுக்கப்பட் டுள்ள வருமானம்தான் ஆல்பா என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ஃபண்ட் குறியீட்டைவிட எவ்வளவு அதிக வருமானம் கொடுத்தாலும் முதலீட்டாளர் களுக்கு சந்தோஷம்தான். ஆனால், அந்த அளவு அதிக வருமானத்தைக் கொடுப்பதற் காக எவ்வளவு ரிஸ்க் அந்த ஃபண்ட் மேனேஜர் எடுத்துள் ளார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபண்ட் மேனேஜர் எடுத்துள்ள ரிஸ்க்கை குறிப்பது தான் பீட்டா (Beta – B) என்னும் அளவுகோல். அதிக ஆல்பாவும் குறைவான பீட்டாவும் ஒரு ஃபண்டுக்கு இருப்பது பொதுவாக நன்று.

அதே போல், லார்ஜ் கேப் ஃபண்டின் ஆல்பாவை, மிட் கேப்/ ஸ்மால் கேப் ஃபண்டின் ஆல்பாவுடன் ஒப்பிடுவது கூடாது. மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளின் ஆல்பா நீண்ட காலத்தில் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். அதே சமயத்தில் லார்ஜ் கேப் ஃபண்டுகளின் ஆல்பா, மிட் கேப்/ ஸ்மால் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆகவே, முதலீட்டாளர்கள், ஆல்பாவை மட்டுமே ஒரு காரணி யாக தங்களின் முதலீட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல், தங்களின் தேவை, காத்திருப்புக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன் போன்றவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஃபண்டு களைத் தேர்வு செய்ய வேண்டும்.



ஆல்பாவை நாம் பார்க்கும் போது கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:

1. கடந்த கால வருமானம் போல, ஆல்பாவும் ஒரு கடந்த கால குறியீடு ஆகும். எதிர்காலத்திலும் கடந்த காலத்தைப் போல அதே ஆல்பாவை ஒரு ஃபண்டு கொடுக்கும் என்பது உறுதி இல்லை.

2. பேஸிவ்வாக மேனேஜ் செய்யப்படும் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் ஆல்பா நெகடிவ்வாக இருக்கும். ஏனென்றால், அவ்விதமான ஃபண்டுகள் குறியீட்டை ஒட்டிய வருமானத்தைக் கொடுக்கின்றன – அந்த வருமானத்திலிருந்து ஃபண்ட் மேனேஜ்மென்ட் செலவுகள் கழிக்கப்படும்போது, ஃபண்டின் ஆல்பா நெகடிவ்வாக இருக்கும். ஆகவே, ஆல்பா நெகடிவ்வாக இருப்பதால், ஒரு ஃபண்ட் சரியாக செயல்படவில்லை என்று கூறிவிட முடியாது. அது ஆக்டிவ்வாக செயல்படும் ஃபண்டா அல்லது பேஸிவ்வாக செயல்படும் ஃபண்டா என்பதை பொறுத்துத்தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.

3. ஆர் ஸ்கொயர்டு (R Squared) என்னும் அளவுகோல் ஒரு ஃபண்ட் எந்த அளவு குறியீட்டுடன் ஒத்து (correlation) செயல்படுகிறது என்பதைக் குறிக்கும். அவ்விதமான ஆர் ஸ்கொயர்டு மிகவும் குறைவாக (< 75) இருந்தால், ஆல்பாவைப் பார்ப்பதில் அர்த்தமில்லை.

4. ஆல்பாவின் உண்மையான நிலை ஒரு ஃபண்டின் பீட்டாவை வைத்துத்தான் உருவாகிறது. உதாரணத்துக்கு, குறியீட்டின் வருமானம் கடந்த வருடத்தில் 10% என வைத்துக் கொள்வோம். ஒரு ஃபண்டின் வருமானம் 15% என வைத்துக் கொள்வோம். அந்த ஃபண்டின் பீட்டா 1.5 என வைத்துக் கொள்வோம். மேற்படி விபரங்களின்படி, அந்த ஃபண்டின் ஆல்பா ‘0’ ஆகும். ஏனென்றால் ஃபண்டின் பீட்டா 1.5 என்பதால், அந்த ஃபண்ட் கொடுத்திருக்க வேண்டிய வருமானம் 15% (குறியீட்டின் வருமானம் X ஃபண்டின் பீட்டா; அதாவது 10 X 1.5 = 15). 15 சதவிகிதத்துக்கு மேல் கொடுக்கும்போதுதான் அந்த ஃபண்டின் ஆல்பா பாசிட்டிவ்வாக இருக்கும். மேற்கூறிய ஃபண்ட் அதே ஆண்டில் 17% வருமானத்தை தந்திருந்தால், அந்த ஃபண்டின் ஆல்பா 2-ஆக இருந்திருக்கும். ஆகவே, ஆல்பா எந்த அளவு ரிஸ்க் எடுத்து வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இரண்டு ஃபண்டுகள் ஒரே வருமானத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த இரண்டு ஃபண்டுகளின் ஆல்பாவும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களுக்காக முன்பக்கத்தில் உள்ள அட்டவணையில் நல்ல ஆல்பா உள்ள ஃபண்டுகள் சிலவற்றைக் கொடுத்து உள்ளோம். நீங்களும் இதுபோல் ஆராய்ந்து நல்ல ஆல்பா உள்ள ஃபண்டுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum