Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்

View previous topic View next topic Go down

வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்

Post by தருண் on Mon Jun 20, 2016 3:00 pm

வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.

ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.



யாருக்கு எந்தப் படிவம்?

ஐடிஆர் 1 (சகஜ்) - ITR 1 (SAHAJ)

தனிநபர்கள் - இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.

1. பென்ஷன் அல்லது சம்பளம்.

2. வீட்டு வாடகை - முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.

4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).

ஐடிஆர் 2 - (ITR 2)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால்.

3. முதலீட்டு வரவு (Capital gains)

4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்

5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.

ஐடிஆர் 2ஏ ( ITR 2A)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து

4. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது

5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது

ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)

தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.

4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்‌ஷன் 44 AD அல்லது செக்‌ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. செக்‌ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.

ஐடிஆர் 3 (ITR 3)

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கள், பார்டனர்ஷிப் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருக்குமென்றால்.

ஐடிஆர் 4 (ITR 4)

இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது. சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தயம் லாட்டரி உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.

இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங் களுக்கானவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம்.

இந்த வருடம் என்ன மாற்றங்கள்..?

இந்த வருடம் என்ன வகை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று பார்ப்போம்.

1. வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்குமானால், ஷெட்யூல் ஏஎல் (AL) பூர்த்தி செய்யவேண்டும். இந்த ஷெட்யூல் தனிநபரின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் கணக்காகும். இது ITR 1, 2, 2A, 3, 4, 4S படிவங்களுக்கும் பொருந்தும். அதாவது, 31.3.2016 நிலவரப்படி இருக்கும் நிலம், வீடு, கையிருப்பு பணம், நகை, தங்கம், வாகனம் (படகு, விமானம்) தவிர, இந்தப் பொருட்களின் மீதான கடன்.

ஏஎல் ஷெட்யூலில் தரப்பட வேண்டிய சொத்துக்கள் அவை வாங்கப்பட்ட விலையில் காண் பிக்கப்படவேண்டும். அவை வெகுமதியால் அல்லது மரபுரிமை யால் பெற்றிருந்தால் அதன் முன் உரிமையாளரின் வாங்கப்பட்ட விலையைக் குறிப்பிட வேண்டும்.

2. வணிக அறக்கட்டளை அல்லது முதலீட்டு நிதியிலிருந்து (Business Trust or investment fund) பெறப்பட்ட வருமானம். ஷெட் யூல் பி.டி1-ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது ஐடிஆர் 1, 2, 2ஏ, 3, 4-க்கு பொருந்தும்.

3. மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Collected at Source - TCS): இந்த விவரங்கள் ஷெட்யூல் டிசிஎஸ்-ல் கொடுக்கலாம். ஐடிஆர் 1, 2, 2 ஏ-க்கு பொருந்தும். ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கு மேல் நகை, ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, விற்பவர் நம்மிடம் அந்த தங்கத்தின் மேல் வரி விதித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார். டிடிஎஸ் போல, இது டிசிஎஸ். போன வருடம் வரை இதற்கு படிவத்தில் இடம் இல்லாதிருந்தது. இப்போது படிவம் மாறுதலால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.



4 ஐசிடிஎஸ் (ICDS - Income computation and Disclosure Statement) – இது ஐடிஆர்4-க்கு பொருந்தும். இதை வர்த்தகத்தில் வரும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்வது என சில விதிமுறைகள், சர்வதேச கணக்கியல் முறைப்படி (international accounting standard) அமைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட வருமானக் கணக்கின்படி இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், அதை இந்த ஷெட்யூலில் காண்பிக்க வேண்டும்.

ஐசிடிஎஸ் என்பது தனி மனித வருமானம் காட்டப்படும்போது வரும். உதாரணமாக, ரூ.10 லட்சம் டெபாசிட் மார்ச் மாதம் 20-ம் தேதி போடப்படுவதினால் அந்த வருட வட்டி வருமானத்தில் இந்த 11 நாட்களுக்கான வட்டி காட்டப்படாமல் அடுத்த வருடம் காண்பிக்கப்படும். ஆனால், சர்வதேச கணக்கியல் முறைப்படி, அக்குரூட் (Accrued) என்று காட்டப்பட்டு, இந்த வருட வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

செக்‌ஷன் 80 சிசிடி (1பி) {CCD(1B)} கீழ் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை உண்டு. அதாவது, தேசிய பென்ஷன் முறையில் (National Pension Scheme) இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டால். இதற்கான கூடுதல் இடமும் இந்தப் படிவத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவை தவிர, கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான (Partnership, Trust, companies) மாறுதல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை எல்லாம் நிறுவனங்களுக்கானவை என்பதால் அவற்றைப் பற்றி நாம் இங்கே விவரிக்கவில்லை.
புதிய படிவங்களும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்!

-தொடரும்
--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

Re: வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்

Post by தருண் on Tue Jun 21, 2016 3:13 pm

கடந்த இதழில் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான படிவங்கள், மாறுதல்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மின்னணு வரிக் கணக்கு (இ - ஃபைலிங்) பற்றி விரிவாகப் பார்ப்போம். இது மிக முக்கியமான பகுதி. இ - ஃபைலிங் (E filing) வசதியினால், நமக்கு வசதியான நேரத்தில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யமுடியும்.

முன்பெல்லாம் மணிக்கணக் காக இன்கம் டாக்ஸ் ஆஃபீசில் ஸ்பெஷல் கவுன்டர்களில் நின்று நொந்த நாட்கள், இனிமேல் இல்லை - அதெல்லாம் மலையேறிவிட்டது.

கடைசி தேதியில் இரவு 12 மணிக்குக் கூட உங்கள் வீட்டில் இருந்தபடியே ரிட்டர்னை ஃபைல் செய்ய முடியும்! அதற்காக அது வரைக்கும் காத்திருக்க தேவை இல்லை.

இதற்கு http://incometaxindiaefiling.gov.in/ என்ற இணைய தளத்துக்கு (web site) க்குள் சென்று மேலே குறிப்பிட்டுள்ள குயிக் இ ஃபைலிங் (quick e filing) ஐ க்ளிக் செய்ய வேண்டும். இதற்கு உங்களின் பான் எண் தேவை. இதுதான் உங்களின் யூசர் ஐடி. இத்துடன் நீங்களே கொடுக்கும் பாஸ்வேர்ட், பின் உங்கள் பிறந்த தேதியும் கொடுத்தால், அங்கே காட்டப்படும் கோட் நம்பரையும் (கேப்பிட்சா) தந்தால் நீங்கள் உள்ளே நுழைந்து விடுவீர்கள்.

இப்போது முதலில் செய்ய வேண்டியது உங்களின் படிவம் 26ஏஎஸ்(Form 26AS) ஐ பார்க்க வேண்டும். இதன் நோக்கம் உங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட டிடிஎஸ், சரியாக காட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது. சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் குயிக் இ ஃபைலிங்க்கு செல்லலாம். இந்த வசதி நீங்கள் நிரப்ப வேண்டிய படிவம் ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4எஸ் ஆக இருந்தால் மட்டுமே. அப்படி அல்லாமல் ஐடிஆர் 2 அல்லது ஐடிஆர்4ஆக இருந்தால் நீங்கள் டவுன்லோடு ஆப்ஷன் -க்கு சென்று சரியான படிவத்தை தர விறக்கம் செய்ய வேண்டும்.

குயிக் இ ஃபைலிங் என்னும்போது நீங்கள் உங்கள் மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) தேர்வு செய்து பின் கேட்கப் படும் கேள்வி - டேடா பேஸ் அல்லது முந்தையை ஆண்டின் வருமான வரி கணக்காக அல்லது புதிதாக ஒன்றா ... இதில் ஒன்று தேர்வு செய்யவேண்டும்.முதல் இரண்டு தேர்வு செய்தால் பாதி விவரங்கள் தாமாகவே பூர்த்தி செய்யப்பட்டுவிடும். நிரப்பப் படாத சிவப்புக்குறி காண்பிக்கும் விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும். எல்லா சிவப்பு குறியிட்ட விவரங்களும் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ரிட்டர்ன் அப்லோட் செய்ய முடியாது குயிக் இ ஃபைல் செய்யாமல், படிவம் தரவிறக்கம் செய்து பண்ணும்போது, இதே போல் பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை எக்ஸ் எம்எல் (XML) என்னும் ஃபார்மெட் இல் சேவ் (save) செய்து அதை அப்லோட் செய்யவேண்டும். குயிக் இ ஃபைல் செய்யும்போது இது தேவை இல்லை. நேரடியாக அப்லோட் ஸ்க்ரீன் வரும். அதை க்ளிக்கினால் போதும்.

இந்த வகையில் அப்லோட் செய்யப்பட்ட படிவங்களில் உங்கள் டிஜிட்டல் கையெழுத்து இருக்காது. ஆகையால் நீங்கள்தான் இந்தப் படிவத்தை சமர்ப்பித்தீர்கள் என்பதற்கு ஒரே ஆதாரமாகிறது ஐடிஆர் 5 (ITR 5). இதனை அனுப்புவதற்கு சில வழிகள் உள்ளன

1. ஆதார் அட்டை வழி : இதற்கு நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை, வருமான வரியுடன் லிங்க் செய்திருக்க வேண்டும்.அப்லோட் செய்த வுடன் ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்களுக்கு அனுப்பப்படும். இதை வைத்து உங்கள் ஐடிஆர்- ஐ நீங்கள் சரி பார்க்க முடியும். தனியாக ஐடிஆர் 5 எடுத்து அனுப்ப வேண்டாம். இந்த இவிசி (EVC -electronic Verification code) ஆதார் வழியாக சரி பார்க்கும்போது ஐந்து நிமிடங்களுக்கே செல்லு படியாகும்.

2. வருமான வரியின் இ ஃபைலிங் வலைதளம் வழியாக இவிசி செய்வதற்கு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த இவிசி கோட் உங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு வரும் இந்த கோட் 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.



3. நெட் பேங்கிங் வழி – இதன் மூலம் உங்கள் வருமான வரி தளத்தை அணுகினால் இவிசி கோட் உங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு வரும் இந்த கோட் 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

4. ஏடிஎம் (ATM) – ஏடிஎம் கார்டு உங்களின் செல் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த முறை சாத்தியம். மற்றவையெல்லாம் மேலே கூறியபடிதான்.

இப்படி இவிசி உருவாக்காமல் அப்லோட் செய்யப்பட்ட ரிட்டன்க்கு ஐடிஆர்5 ஐ பிரின்ட் எடுத்து கையெழுத்திட்டு பெங்களூரில் உள்ள மத்திய பரிசீலனை அலுவலகத்துக்கு (CPC Office)அனுப்பவேண்டும்.

முகவரி : Income Tax Department – CPC, Post Bag – 1, Electronic City Post Office, Bangalore - 560 100, Karnataka.

செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை!

வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது செய்ய வேண்டிய விஷயங்கள், செய்யக்கூடாத விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

1. ஆதார் முறையில் பதிவேற்றம் செய்யும்போது ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமான வரித் துறைக்கு கொடுத்த விவரங்க ளிலிருந்து மாறுபட்டிருந்தால், பதிவேற்றம் செய்ய முடியாது. உதாரணமாக ஆதாரில் உங்கள் பெயர் ராகவன் சேதுராமன் என்றும் வருமானவரியில் எஸ்.ராகவன் என்றும் இருந்தால் பதிவேற்றம் செய்ய முடியாது. இதை ஆதாரிலோ அல்லது வருமான வரித்துறை தகவல்களிலோ சரி செய்ய வேண்டும்.

2. டிடிஎஸ் பிடிக்கும் நிறுவனங் களுக்கு 31 மார்ச் வரையிலான தொகையை உங்கள் கணக்கில் பதிவேற்றம் செய்ய 15 மே வரையில் நேரம் உள்ளது. ஆனாலும் இதற்குள் செய்ய படாமல் போய்விடுகிறது. அதனால் உங்களின் 26ஏஸ் உங்கள் டிடிஎஸ்- ஐ சரியாகக் காண்பிக்காது. நீங்கள் கொடுக்கும் வரித் தொகையும், 26ஏஸ் இல் காட்டப்படுவதும் மாறுபட்டால், ரிட்டர்ன் ஃபைல் செய்யும்முன் அந்த நிறுவனத்திடம் சரி செய்யச் செய்யுங்கள்.

3. தற்போது 26 ஏஎஸ்- ல் உங் களுக்கு கணக்கில் இல்லாத தொகை தவறுதலாக காட்டப் பட்டிருந்தால் நீங்கள் அதை உங்கள் படிவத்திலேயே சுட்டிக் காட்ட ஏதுவாக இடம் உண்டு.



4. எல்லா படிவங்களிலும் உங்கள் வங்கிக் கணக்குகளை காட்டப்பட இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய தேதியில் எல்லாவற்றை யும் சொல்லாமல் போனால் அபராதம் ஏதுமில்லை. ஆனாலும் தற்போது வங்கிக் கணக்குகளும் பான் எண் வைத்து இணைக்கப் பட்டுள்ளதால் நீங்கள் காட்டாத வங்கிக் கணக்குகளும் வருமான வரித் துறைக்கு தெரியும். ஆகவே உங்கள் வருமானவரிப் படிவம் ஸ்க்ரூடினி செக் செய்ய எடுத்துக் கொள்ளப்படக்கூடும். சென்ற வருடம் வரை உங்கள் பெயர் ஜாயின்ட் அக்கவுன்ட்டில் இருந்தாலும்கூட சொல்லப்பட வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்த வருடம், முதல் ஹோல்டராக இருக்கும் வங்கிக் கணக்கை மட்டும் காட்டினால் போதும்

5. போன வருடம் ஒரு வீடு மட்டும் இருந்தால் ஐடிஆர்1, ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் ஐடிஆர் 2 என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டுக்கு மேற்பட்டு இருந்தாலும் ஐடிஆர்1 இல் பதிவு செய்யலாம்.

6. வரி விலக்குக்கு உட்பட்ட வருமானம் (Exempted income) ரூ. 5,000 அல்லது குறைவாக இருந்தால் மட்டுமே ஐடிஆர்1 என்று இருந்தது. இப்போது ரூ. 5,000க்கு மேல் இருந்தாலும் ஐடிஆர்1 -லேயே செய்யலாம்.

7. டெபாசிட்டுக்களிலிருந்து வரும் வட்டி வருமானத்துக்கு வரிச்சலுகை கிடையாது. செக்‌ஷன் 10இன் கீழ் கொடுக்கப் பட்டுள்ள ரூ. 10,000 வரையிலான வரி விலக்கு சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு மட்டும் தான். ஆகவே ரிட்டர்ன்ஸ் ஃபைல் செய்யும்போது எல்லா வட்டி விவரங்களையும் (அதற்கு form 15ஜி /ஹெச் கொடுக்கப் பட்டிருந்தாலும்) காண்பிக்க வேண்டும்.
-விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum